மீண்டும் பெகாசஸ் விவகாரம்- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் வியூகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்பில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப வியூகம் வகுத்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் நாட்டின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற இரு சபைகளிலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளுமே முடங்கியது. ஆனால் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்திருந்தார்.

உச்சநீதிமன்ற குழு

உச்சநீதிமன்ற குழு

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுத்தது பெரும் சர்ச்சையானது. மேலும் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர்கள் குழுவை அமைக்க கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் பெகாசஸ் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது. இதில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் ஜோஷி, தொழில்நுட்ப நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றனர்.

நியூயார்க் டைம்ஸ் வீசிய குண்டு

நியூயார்க் டைம்ஸ் வீசிய குண்டு

இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழானது பெகாசஸ் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலுடன் மத்திய அரசு 2017-ம் ஆண்டு செய்து கோண்ட 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸ் மென் பொருள் வாங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

காங்., இடதுசாரி தலைவர்கள் கொந்தளிப்பு

காங்., இடதுசாரி தலைவர்கள் கொந்தளிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மீது உளவு பார்க்கவே மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியது. அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாதுகாப்பு துறை, நீதித்துறை என அனைத்து தரப்பினரது செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்ப்பட்டுள்ளது. இது தேசத்துரோகம். பிரதமர் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது என சாடியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், இஸ்ரேலுடனான நல்லுறவை மத்திய அரசு கொண்டாடுகிற இத்தருணத்தில் அந்நாட்டிடம் பெகாசஸ் மென்பொருளின் அட்வான்ஸ் வெர்சன் இருக்கிறதா? எனவும் கேளுங்கள் என பிரதமர் மோடியை கிண்டலடித்துள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவாண், நியூயார்க் டைம்ஸ் செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதே கோரிக்கையை இடதுசாரி தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் நியூயார்க் டைம்ஸ் செய்தியை நம்ப வேண்டுமா? என மத்திய அமைச்சர் வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்

இந்த விவகாரத்தை நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கிளப்ப திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்துகள் கேட்கப்படும். அதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கொரோனா 3-வது அலை தாக்கம் இருப்பதால் நாடாளுமன்ற இரு சபைகளும் வெவ்வேறு நேரங்களில் கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+