மெரினாவில் பேனா நினைவுச்சின்னம்.. இறுதி ஒப்புதல் அளித்தது மத்திய அரசு.. பணிகள் தொடங்குவது எப்போது?
டெல்லி: மெரினாவில் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது.
இதை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் கடந்த மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்து இருந்தது.இந்த நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்கு முறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணிகளை இனி தமிழக அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதால் இனி தமிழக அரசின் பொதுப்பணித்துறை டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை தொடங்கப்படும் என தெரிகிறது. வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடம் திறக்கப்படுகிறது. எனவே அன்றைக்கே இதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications