எந்த வயதில் இருந்தாலும் பரவாயில்லை.. புகைப்பிடிப்பதை நிறுத்தினால் நன்மைகள் தான்.. வெளியான புது ஆய்வு
டெல்லி: 40 வயதுக்கு முன்பாக புகை பிடிப்பதை கை விடுபவர்கள், புகை பிடிப்பாதவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்களோ அந்த அளவுக்கு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவருக்கு மட்டுமின்றி அவருக்கு அருகில் நிற்பவருக்கும் பாதிப்பு ஏற்படும். புகைப்பிடிப்பதால் புற்றுநோய் கூட ஏற்படும் என்பதால், புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பல இடங்களில் எழுதப்பட்டிருப்பதை நாம் காண முடியும். உலக சுகாதார அமைப்பும், புகைப்பிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறுகிறது.

மேலும் ஒருவர் சிறு வயதில் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், நாட்கள் செல்ல செல்ல அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் என்றே சொல்லலாம். இதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் இனிமேல் புகைப்பிடிக்காமல் இருந்தால் மட்டும் என்ன கூடுதல் வருஷம் வாழ்ந்திர முடியுமா? என்று புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்வதுண்டு.
3 ஆண்டுகளில் திரும்ப பெற முடியும்: இந்த நிலையில் தான், 40 வயதுக்கு முன்பாக புகை பிடிப்பதை கை விடுபவர்கள், புகை பிடிப்பாதவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்களோ அந்த அளவுக்கு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஜர்னல் என் ஜே எம் என்ற இதழியல் ஆய்வில் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது. இதில் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.
புகைப்பிடிப்பது கை விடுபவர்கள் எந்த வயதில் விட்டாலும் பத்து ஆண்டுகளில் புகைபிடிக்காதவர்கள் அளவுக்கு உடல் நலம் பெற முடியும். வெறும் மூன்று ஆண்டுகளில் பாதி அளவு ஆரோக்கியத்தை பெற முடியும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
15 லட்சம் பேரிடம் ஆய்வு: புகைப்பிடிப்பதை நிறுத்துவது மரணத்தை ஏற்படுத்துவதை அபரி விதமாக குறைக்கிறது. புகைப்பிடிப்பதை விட்டவர்கள் அதற்கான பலனை விரைவாகவே அறுவடை செய்ய முடியும் என்று டொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் பிரபகத் ஜா கூறியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நார்வே ஆகிய நாடுகளை சேர்ந்த 15 லட்சம் பேரிடம் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது
15 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக 40 முதல் 79 வயதிற்குட்பட்ட புகைப்பிடிப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புகை பிடிக்காதவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
எந்த வயதாக இருந்தாலும்: அதாவது இதன் அர்த்தம் என்னவென்றால் புகை பிடிப்பவர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் 10 முதல் 13 ஆண்டுகளை இழக்கிறார்கள். எந்த வயதில் புகை பிடிப்பதை நிறுத்தினாலும் அதிக ஆயுளை கொடுக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குள் புகைப்பிடிப்பதை கை விட்டவர்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை அவர்கள் வாழ்நாள் அதிகரிக்க உதவுகிறது.
நடுத்தர வயதில் இருப்பவர்கள் பலரும் புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கு மிகவும் கால தாமதமாக ஆகிவிட்டது. இதனால் எந்த பயனும் இல்லை என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எந்த வயதில் புகை பிடிப்பதை கைவிட்டாலும் விரைவான பலன்கள் கிடைக்கின்றன. புகை பிடிப்பதால் வரும் பெரிய நோய்கள் அபாயத்தை கூட குறைக்கிறது.
இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் நீண்ட காலம் உடல் நலமுடன் வாழலாம். புகைப்பிடிப்பதை கைவிடுவது புற்றுநோய் பாதிப்புகள் வருவதை கூட குறைக்கலாம். சுவாசப் பிரச்சினைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கூட குறைக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏனெனில் புகைப் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கும் என்பதால் இது குறைவாக உள்ளது.












Click it and Unblock the Notifications