நீங்களே ஜல்லிக்கட்டுக்கு வாங்க.. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அழைத்த தமிழக அரசு! வழக்கில் மாஸ் ட்விஸ்ட்
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடக்கும் விசாரணையில் இன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடி கபில் சிபல் சரமாரி வாதங்களை வைத்தார்.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த அமர்வில் இந்த வழக்கில் தமிழ்நாட்டில் பாரம்பரிய காளைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்று சொல்ல முடியாது. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு கிடையாது. இதைத்தான் முன்பு உச்ச நீதிமன்ற அமர்வு சொன்னது.
மனிதர்கள் காயமடைகிறார்களே குத்து சண்டையை தடை செய்யலாமா? ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

ஜல்லிக்கட்டு
ஆனால் தமிழ்நாடு அரசு அதற்கு எதிராக சட்டம் இயற்றி உள்ளது. மனிதர்கள் மகிழ்விற்காக மிருகத்தை கோபப்படுத்தி அதை தாக்குகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது விலங்குகளுக்கு எதிரான கொடுமை. இதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எங்களிடம் உள்ளன என்று பீட்டா கூறியது. இதையடுத்து குத்துச்சண்டையில் கூடத்தான் மனிதர்கள் காயம் அடைகிறார்கள் அதை நிறுத்துவிடலாமா? நீங்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்களை ஏற்க முடியாது. சிசிடிவி ஆதாரங்கள் இருக்கிறதா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பீட்டா அமைப்பு சிசிடிவி ஆதாரங்கள் இல்லை. அதே சமயம், குத்துச்சண்டையை நிறுத்துவீர்கள் என்றால் இந்த மனுவையே நாங்கள் வாபஸ் வாங்குகிறோம்.

கபில் சிபல்
ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அடக்க பார்க்கிறார்கள். இதில் மாடுகள் கடுமையாக காயம் அடைகிறது என்று பீட்டா வாதம் வைத்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த வாதத்தில், நாம் சுதந்திரமான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதே சமயம் விலங்குகளை சார்ந்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். விலங்குகளை பல வகைகளில் நாம் பயன்படுத்துகிறோம். விலங்குகளை நாம் உணவாகவும் சாப்பிடுகிறோம். காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் என்று இரண்டு வகை உள்ளன. நாம் இப்போது வீட்டு விலங்குகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.

எளிதான காரியம்
ஒரு விலங்கை வீட்டு விலங்காக மாற்றுவது என்பது எளிதான காரியம். அது விலங்குகளுக்கு கடுமையான கஷ்டத்தை ஏற்படுத்த கூடியது. ஆனாலும் விலங்குகளை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறோமே. வீட்டு விலங்குகள் இருக்கிறதே. நாம் விலங்குகளை உண்கிறோமே. அது தவறு இல்லையா? உண்பதற்காகவே கூண்டுகளில் விலங்குகள் வளர்க்கப்படுகிறதே. அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த விலங்குகளை வைத்து இருக்கும் தனி நபர்களின் உரிமைகளை பற்றி நாம் பேசுவது இல்லையே. ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் என்பதே, கொடுமைகள் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

எளிதான காரியம்
ஒரு விலங்கை வீட்டு விலங்காக மாற்றுவது என்பது எளிதான காரியம். அது விலங்குகளுக்கு கடுமையான கஷ்டத்தை ஏற்படுத்த கூடியது. ஆனாலும் விலங்குகளை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறோமே. வீட்டு விலங்குகள் இருக்கிறதே. நாம் விலங்குகளை உண்கிறோமே. அது தவறு இல்லையா? உண்பதற்காகவே கூண்டுகளில் விலங்குகள் வளர்க்கப்படுகிறதே. அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த விலங்குகளை வைத்து இருக்கும் தனி நபர்களின் உரிமைகளை பற்றி நாம் பேசுவது இல்லையே. ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் என்பதே, கொடுமைகள் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

விலங்குகளுக்கு வலிக்கும்
விலங்குகளுக்கு வலிக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் குதிரை வைத்து வண்டி ஓட்டுகிறார்கள், பந்தயம் நடத்துகிறார்கள், பொதி சுமக்க வைக்கிறார்கள். இது எல்லாம் தவறு கிடையாதா? இதை எல்லாம் இவர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி கேஎம் ஜோசப், விலங்குகளுக்கு இருக்கும் வலி என்றால் என்ன? விலங்குகளுக்கு உண்மையில் வலி இருக்கிறதா? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ன ஆதாரம் உள்ளது? இதில் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறதே என்று கூறினார்.

ஆஜரான வழக்கறிஞர்
இதையடுத்து பேசிய தமிழ்நாடு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இங்கே விலங்குகளின் உரிமைகள் பற்றி இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை? இது எப்படி உரிமைகள் தொடர்பானதாக இருக்கும். அனைத்தையும் உரிமைகளோடு தொடர்புபடுத்தி முடியாது. விலங்குகளுக்கு தேவையில்லாத வலியை ஏற்படுத்த கூடாது என்பது சரிதான். ஆனால் இங்கே தேவையில்லாத வலியை ஏற்படுத்துவது இல்லையே?, என்று கூறினார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி ராய், நிறைய பேர் ஒரே நேரத்தில் மாடுகள் மீது தாவினால் என்ன நடக்கும்?

ஜல்லிக்கட்டு விளக்கம்
இதற்கு பதில் அளித்த, தமிழ்நாடு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த விளையாட்டு முறை எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும். எங்களிடமும் வீடியோ ஆதாரம் இருக்கிறது. நாங்கள் வீடியோவை காட்டுகிறோம், என்று கூறினார். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ராய்.. ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வந்த பின், எங்களையும் நீங்கள் ஜல்லிக்கட்டு பார்க்க அழைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த கபில் சிபல்.. கண்டிப்பாக உங்களை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அழைப்போம் என்று கபில் சிபல் வாதம் வைத்தார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜோசப், பல போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் காளை மீது தாவினால் என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கபில் சிபல், ஒரு நேரத்தில் ஒரு மாடு மீது ஒருவர்தான் தாவ வேண்டும் என்ற விதி உள்ளது. இதை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்வோம்.