சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.79 ரூபாய்.. டீசல் விலை ரூ.97.59-க்கு விற்பனை

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உச்சத்தை தொட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 79 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.. நேற்றைய விலையில் எந்தவித மாற்றமுமின்றி இன்றும் அதே விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் மறுபடியும் அதிகமாக தொடங்கிவிட்டன. அப்போதிலிருந்து இப்போது வரை அந்த விலையும் குறையவே இல்லை..

Petrol Diesel Price increases in Chennai, One Liter Petrol Rs.101.79 and Diesel 97.59

இந்த முறை 2வது அலை பரவல் இந்தியாவை உலுக்கி எடுத்துவிட்டது.. அதனால் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை அவ்வப்போது, உயர்த்தி வருகின்றன. நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து குறையவே இல்லை. அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 79 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது இன்றும்கூட விலை குறையவே இல்லை.. கடந்த 10 நாட்களாகவே வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.. பெரும்பாலான நகரங்களில் கடந்த சில நாட்களாகவே டேராடூன், சண்டிகா், கவுகாத்தி, ராஞ்சி போன்ற நகரங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் இருந்து வருகிறது.. கொரோனாவுக்கு பிறகு கச்சா எண்ணெயின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படாததும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+