இந்தியாவில்...தொடர்ந்து...உச்சத்தை எட்டும் பெட்ரோல் விலை!!
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 45 பைசா விலை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் டெல்லியில் ரூ. 81.19ல் இருந்து ரூ. 81.35 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாட்டின் அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் லிட்டருக்கு 16 பைசா அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை செலவினத்தை வைத்து பெட்ரோல் விலையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு லிட்டர் மீது 92 பைசா அதிகரித்துள்ளது.

குருகிராம் மற்றும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 பைசாவில் இருந்து 33 பைசாவாக அதிகரித்துள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மீது 15 பைசா அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் மீது 44 பைசா அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு லிட்டருக்கு 83 பைசா அதிகரித்துள்ளது.
ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17, 16, 13 பைசா என்று ஒரு லிட்டர் மீது தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் அதிகரித்து வந்துள்ளது.
மும்பையில் இன்றைய விலை ஒரு லிட்டருக்கு ரூ. 88.02 ஆக இருக்கிறது. ஐதராபாத்தில் ரூ. 84.55 ஆகவும், சென்னையில் ரூ. 84.40 ஆகவும், பெங்களூருவில் ரூ.83.99 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 82.87 ஆகவும், நொய்டாவில் ரூ. 81.80 ஆகவும், குருகிராமில் ரூ. 79.52 ஆகவும் உள்ளது.
கடந்த 20 நாட்களாக டீசல் விலையில் மாற்றமில்லை. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 73.56 ஆகவும், மும்பையில் ரூ. 80.11 ஆகவும் இருக்கிறது. சென்னையில் ரூ. 78.86 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 77.06 ஆகவும் இருக்கிறது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications