இ.பி.எப் விகிதம் 10% ஆக குறைப்பு.. கைக்கு வரும் ஊதியம் அதிகரிக்கும்.. மாத சம்பளம் வாங்குவோர் குஷி
டெல்லி: வருங்கால வைப்பு நிதி தொடர்பான அரசின் உதவி மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அமைப்பு ரீதியிலான தொழிலாளர்களை பொறுத்தமட்டில், இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய மாத சந்தாவைான 12 சதவீதம், தொழில் நிறுவன அதிபர்கள் செலுத்த வேண்டிய அதே அளவு தொகையையும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும் என்று ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்த சலுகை அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீத ஊழியர்களின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருப்பது அவசியம்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான இ.பி.எப் தொகை இதனால் மிச்சமானது. இப்போது, அது மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை, ஆக. மாதங்ளுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும் என்று நிர்மலா இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். ரூ.6750 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 4.3 கோடி ஊழியர்கள் பலனடைவார்கள்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பங்களிப்பு தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் சீதாராமன் தெரிவித்தார். இந்த நடவடிக்கைால் ஊழியர்கள்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் ஊதியத் தொகை அதிகரிக்கும். ஆனால், அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தா செலுத்தும் தொழிலாளர்கள் அவசர செலவுகளுக்காக தாங்கள் செலுத்திய தொகையில் 75 சதவீத தொகை அல்லது 3 மாத சம்பளம் இதில் எது குறைவோ அதை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதை திரும்ப செலுத்த தேவையில்லை என்று ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், நிர்மலா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications