ராணுவ வீரர்களின் உயிர் தியாகங்கள்- ஆகஸ்ட் 15 முதல் “என் மண் என் தேசம் இயக்கம்” தொடக்கம்-பிரதமர் மோடி
டெல்லி: நமது தேசத்துக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்களைப் போற்ற ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் கூறி இருப்பதாவது: சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் உற்சாகத்தோடு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அமுதப் பெருவிழாவின் போது, தேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன, பன்முகத்தன்மையால் நிறைந்திருக்கின்றன. இந்த ஏற்பாடுகளின் மேலும் ஒரு அழகு என்னவென்றால், இதோடு சாதனை படைக்கும் எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலே நமது இளைஞர்களுக்கு தேசத்தின் மாபெரும் ஆளுமைகளைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. முதல் சில மாதங்களைப் பற்றி மட்டுமே பேசினால், மக்களின் பங்களிப்போடு தொடர்புடைய பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் எழுத்தாளர் சந்திப்புக்கான ஏற்பாடு. இதிலே சாதனை எண்ணிக்கையில் மக்களின் பங்கெடுப்பினைக் காண முடிந்தது. அதே போல, ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியிலே தேசிய சம்ஸ்கிருத சம்மேளனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது வரலாற்றிலே கோட்டைகளின் மகத்துவம் என்ன என்பதை நாமனைவருமே நன்கறிவோம். இதை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு இயக்கமான கோட்டைகளும், கதைகளும், அதாவது கோட்டைகளோடு தொடர்புடைய கதைகளுமே கூட மக்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.

என் மண் என் தேசம்: இன்று தேசத்தின் நாலாபுறத்திலும் அமுதப் பெருவிழா எதிரொலிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானிகளின் நினைவுகளைப் போற்றும் வகையிலே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆளுமைகளின் நினைவாக, தேசத்தின் இலட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில், சிறப்புக் கல்வெட்டுக்களும் நிறுவப்படும். இந்த இயக்கத்தின்படி தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரையும் மேற்கொள்ளப்படும். தேசத்தின் கிராமம் தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை, தேசத்தின் தலைநகரான தில்லியை வந்தடையும். இந்த யாத்திரையானது, தன்னோடு கூடவே தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, மண்ணோடு சேர்ந்து செடிகளையும் கொண்டு வரும். 7500 கலசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும், செடிகளையும் சேர்த்து, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப்பூங்காவனம் நிர்மாணிக்கப்படும். இந்த அமுதப்பூங்காவனம், ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மிக உன்னதமான அடையாளமாக ஆகும். கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளின் அமுதக்காலத்தை ஒட்டிய 5 உறுதிமொழிகள் குறித்துப் பேசியிருந்தேன். என் மண் என் தேசம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு நாம் இந்த 5 உறுதிமொழிகளை நிறைவேற்றும் சபதமும் ஏற்போம். நீங்கள் அனைவரும், தேசத்தின் புனிதமான மண்ணை கைகளிலே ஏந்தி சபதம் எடுக்கும் வகையிலே உங்களை நீங்களே சுயமாகப்படம் பிடித்து, அதாவது செல்ஃபி எடுத்து, yuva.gov.in இலே கண்டிப்பாகத் தரவேற்றம் செய்யுங்கள். கடந்த ஆண்டு சுதந்திரத் திருநாளன்று, வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்திற்காக, எப்படி நாடு முழுவதும் ஒருங்கிணைந்ததோ, அதே போல நாம் இந்த முறையும் மீண்டும், வீடுகள்தோறும் மூவண்ணத்தைப் பறக்க விட வேண்டும். இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த முயற்சிகளில் நமது கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், தேசத்தின் சுதந்திரத்திற்காக அளிக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற உயிர்த்தியாகங்கள் பற்றிய தெரிதல் உதிக்கும், சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஏற்படும். ஆகையால், நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், இந்த முயற்சிகளோடு கண்டிப்பாக இணைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications