மக்கள் பார்க்கிறார்கள்.. நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பிரதமர் வேண்டுகோள்!
டெல்லி: இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஏராளமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடரின்போது இளைஞர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்மைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை என்று கூறி அந்த எம்பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இப்படியாக மக்களவையில் 100 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என்பது குறித்து நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் பெண் சக்திகளின் திருவிழா நடைபெறுகிறது. நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் இருக்க கூடாது. நாடாளுமன்ற விவாதங்கள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications