Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னை 20 வருசமா இன்சல்ட் பண்றாங்க! துணை ஜனாதிபதிக்கு போன்போட்டு சொன்ன மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 20 ஆண்டுகளாக தான் பல்வேறு அவமதிப்புகளை சந்தித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தெரிவித்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்பியின் பரிந்துரையுடன் வந்து அத்துமீறி மக்களவைக்குள் கலர் குண்டுகளுடன் 4 பேர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். இதற்காக அடுத்தடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவிலான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது தேசிய அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PM Modi called VP Jagdeep Dhankar and told him that he has been facing various insults for 20 years

இந்த நிலையில் எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமனா ஜெகதீப் தன்கரைபோல் மிமிக்ரி செய்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குடியரசு துணைத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்காக ஒரு மணி நேரம் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். ஆனால், மரியாதையாகவும் கண்ணியமாகவும் அவை இருக்க வேண்டும். பெருமை மிகுந்த நாடாளுமன்ற பாரம்பரியத்தை நாம் பின்பற்றி வருகிறோம். அதை பாதுகாக்க வேண்டும் என இந்திய மக்கள் நினைக்கிறார்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் எதிர்க்கட்சிகளின் இந்த செயல் குடியரசு துணைத் தலைவரை இழிவுபடுத்தும் ஒன்று என சாடியுளார். "நாடாளுமன்ற வளாகத்திலேயே இந்திய குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கரை எம்பிக்கள் இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக அவரை சந்தித்து கவலை தெரிவித்தேன்." என்று ஓம் பிர்லா தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவருக்கான அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று புனிதமிக்க நாடாளுமன்ற வளாகத்தில் சில எம்.பி.க்களின் மோசமான செயல்களால் பெரும் வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக தானும் இதுபோன்ற அவமதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார். குடியரசு துணைத் தலைவர் போன்ற ஒரு அரசியல் சாசன பொறுப்பில் உள்ளவரை இதுபோல் அவமதிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என அவர் தெரிவித்தார். சிலரின் செயல்கள் நான் என் கடமையைச் செய்வதையும், நமது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கொள்கைகளை நிலைநாட்டுவதையும் தடுக்காது என பிரதமரிடம் கூறினேன். அதன் மாண்புகளை அடி மனதில் இருந்து மதிக்கிறேன். எந்த விதமான அவமதிப்பும் என் வழியை மாற்றாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+