மோடி 'தீபாவளி' கொண்டாடிய பாகிஸ்தான் எல்லை சர்ச்சைக்குரிய சர் கிரீக் எவ்வளவு ஆபத்தான இடம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை பாகிஸ்தான் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினருடன் கொண்டாடியது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த சர் கிரீக் பகுதியைத்தான் பாகிஸ்தான் தமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பான இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முட்டுக் கட்டை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதிக்கு நேரில் சென்று எல்லை பாதுகாப்புப் படையினருடன் தீபாவாளியை கொண்டாடி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு குஜராத் மாநிலம் கட்ச் பகுதியின் இறுதி முனையான பாகிஸ்தான் எல்லையில் உள்ள சர் கிரீக் பகுதியில் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

diwali 2024 narendra modi

குஜராத்தின் அரபிக் கடல் ஓரத்தில் உள்ள கோட்டீஸ்வர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரை இறங்கியது. இந்த கோட்டீஸ்வர் கோவில் வளாகமே எல்லை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை காண முடியும்.

இந்த பகுதியில் இருந்து சர் கிரீக்கின் லக்கி நாலா என்ற இடத்தில்தான் எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி "கட்ச் கழிமுகப் பகுதி அதிக வெப்பநிலை காரணமாக சவாலானதாகவும், தொலைதூரமாகவும் உள்ளது. இது மற்ற சுற்றுச்சூழல் சவால்களையும் கொண்டுள்ளது இந்த பகுதி தொலைதூரமானது. பகல் வெயில் சுட்டெரிப்பதுடன் குளிரும் அதிகமாகிறது. கழிமுகப் பகுதியில் பிற சுற்றுச்சூழல் சவால்களும் உள்ளன என தெரிவித்திருந்தார்.

சர் கிரீக் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிக முக்கியமான எல்லைப் பகுதி. சர் கிரீக் அமைந்திருக்கும் இடம் அருகே இந்திய ராணுவ முகாம் இருக்கிறது. இங்கே மனித நடமாட்டமே இல்லாத, செடி கொடி எதுவுமே இல்லாத பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு சகதி மணல் மட்டுமே இருக்கக் கூடிய 'ரான் ஆப் கட்ச்' பகுதியின் இறுதி முனையாக சர் கிரீக் இருக்கிறது.

சர் கிரீக் பகுதியின் ஒரு பகுதியை ஏற்கெனவே ஆக்கிரமித்துவிட்டது பாகிஸ்தான். ரான் ஆப் கட்சி என்பது மனிதர்கள் வாழ முடியாத நிலப்பரப்பு. மழைக்காலங்களில் நீர் நிறைந்ததும் கோடையில் மணற்பாங்கானதாகவும் இருக்கும். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் குஜராத்தின் கட்ச் பகுதியையும் பிரிக்கக் கூடிய சிறிய பகுதிதான் சர் கிரீக்.

இங்கே இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும் அதிகம். பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஊடுருவ வாய்ப்புள்ள எல்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதீதமான அச்சுறுத்தல் உள்ள பகுதி. இந்தியாவுடனான யுத்தங்களில் பாகிஸ்தான் எளிதாக தாக்கிய நிலமும் இந்த சர் கிரீக்தான். இந்த நிலப்பரப்பு தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்தியா- பாகிஸ்தான் இரு தரப்புமே தீர்வு காண முடியாத சர்ச்சைக்குரிய நிலமாகவே சர் கிரீக் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்குதான் பிரதமர் மோடி, தீபாவளியை எல்லை பாதுகாப்பு படையினருடன் கொண்டாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+