கச்சத்தீவை திரும்ப பெற முடியாது என்று சொல்லிவிட்டு, தாரைவார்த்ததாக மோடி திடீரென இப்போ குமுறுவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிய நிலையில், இப்போது பிரதமர் மோடி கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி தான் என ஆவேசமாக பேசியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் மோடி மாற்றிப் பேசுவதன் காரணம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது லோக்சபாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது." எனக் காட்டமாகப் பேசினார்.

PM Modi contradictory statement on katchatheevu after bjp government told in supreme court

மேலும், "இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத் தீவு, தற்போது அந்நிய நாட்டுக்குச் சொந்தமாக உள்ளது. இது, பாரத மாதாவின் ஒரு பகுதி இல்லையா? அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது பாரத மாதாவின் ஓர் அங்கத்தைச் சிதைப்பதாகும்" எனத் தெரிவித்தார் பிரதமர் மோடி.

ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மதத்தில், கச்சத்தீவை மீட்கக்கோரி முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, இலங்கையிடம் போர் தொடுத்துத்தான் கச்சத்தீவை திரும்பப் பெற முடியும்." என்றார்.

1974ஆம் ஆண்டு இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனவே அதை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அப்போது உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போதும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

ஆனால், 9 ஆண்டுகள் கழித்து இப்போது பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பேசும்போது, அதுவும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசும்போது, கச்சத்தீவு விவகாரத்தை முன்வைத்து, திமுகவையும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையும் விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.

1974ல் பிரதமர் இந்திரா காந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை எடுத்த நிலையில், கச்சத்தீவை இலங்கைக்குத் தரக் கூடாது என்று பிரதமர் இந்திரா காந்திக்கு அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். ஆனால், தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுகவினரும், கருணாநிதி கட்சத்தீவை தாரைவார்த்ததாக குற்றம்சாட்டினர்.

இதற்கு 2016 வாக்கில் விளக்கம் அளித்த கருணாநிதி, 1974-ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை தாரை வார்க்கும் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். எனினும், இப்போதும் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினரும் கச்சத்தீவை கருணாநிதி தாரைவார்த்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

PM Modi contradictory statement on katchatheevu after bjp government told in supreme court

இப்போது, பிரதமர் மோடி, கச்சத்தீவை மீட்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி, கச்சத்தீவை தாரைவார்த்தது இந்திரா காந்திதான் என விமர்சித்துள்ளார். 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டில், கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது, அது இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது எனச் சொன்னது மத்திய அரசு.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கச்சத்தீவு விவகாரம் பற்றி இந்திரா காந்தியை விமர்சித்து ஆவேசமாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வரும் இலங்கைக்கு எதிராக கச்சத்தீவு விவகாரத்தை முன்வைத்து இப்போது பிரதமர் மோடி பேச வேண்டிய தேவை என்ன என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+