டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இந்துக்களுடன் சுருங்கிவிடக் கூடாது!" தென் மாநிலங்களுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக! பரபரத்த பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஹைதராபாத் தேசிய செயற்குழு கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் நடந்த மீட்டிங்கில் பிரதமர் மோடி பேசியது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தாண்டு இறுதியில் தெலங்கானாவுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அந்தமான் நிகோபாரை அதிர வைத்த நிலநடுக்கம்..அடுத்தடுத்து 6 முறை கடலுக்குள் அதிர்வு அந்தமான் நிகோபாரை அதிர வைத்த நிலநடுக்கம்..அடுத்தடுத்து 6 முறை கடலுக்குள் அதிர்வு

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அதேநேரம் தென் மாநிலங்களில் இன்னும் கூட பாஜக வீக்காகவே உள்ளது.

 தென் மாநிலங்கள்

தென் மாநிலங்கள்

தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் வகையிலேயே பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி செயற்குழு உறுப்பினர்கள் உடன் உரையாடினார். அப்போது பாஜக விளிம்புநிலை சமூகத்தினருக்கான அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இது இந்துக்களுக்கு மட்டும் எனச் சுருங்கிவிடக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாஜக

பாஜக

சமீப ஆண்டுகளாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் அளிப்பது, தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு நலத்திட்டங்களை அறிவிப்பது மூலம் பாஜக தேர்தலில் பலன் பெற்றுள்ளது. குறிப்பாகச் சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அசம்கர் மற்றும் ராம்பூர் பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இருந்தது.

 ஆராய வேண்டும்

ஆராய வேண்டும்


இதை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட மோடி, அரசின் கொள்கைகளால் பயனடைந்த விளிம்புநிலை முஸ்லிம் சமூகங்கள் கட்சிக்கு எவ்வாறு ஆதரவு அளித்தன என்பதைக் கட்சி ஆராய வேண்டும் என்று கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜவின் வளர்ச்சி குறித்து அம்மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் விளக்கிக் கொண்டு இருக்கும் போது, பிரதமர் மோடி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 சுருக்கிக் கொள்ளக் கூடாது

சுருக்கிக் கொள்ளக் கூடாது

இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களும் பலன் பெறும் வகையில் நமது திட்டம் இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். பாஜக வகுப்புவாத அரசியல் செய்வதாகவும் இந்து வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்துச் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இருப்பினும், பிரதமர் மோடி அனைவரையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றே கூறினார் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

Recommended Video

    YSRCP Minister Roja Selvamani Selfie witth PM Modi and Andhra CM Jagan Mohan Reddy - Video
     ஆர்எஸ்எஸ்

    ஆர்எஸ்எஸ்

    இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரிவினரை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு புது பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்தச் சூழலில் இந்துக்களைத் தாண்டி அனைத்து பிரிவிலும் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாஜக உதவ வேண்டும் எனப் பிரதமர் மோடி தனிப்பட்ட மீட்டிங்கில் கூறி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    English summary
    Prime Minister Narendra Modi says BJP outreach towards marginalised communities should be expanded and not limited to just Hindus: (ஹைதராபாத் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு) BJP plan for southern states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X