புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? நாளை முதல் பிப்.19 வரை பரபரக்க போகும் டெல்லி-திக்..திக் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழு நாளை கூடுகிறது. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவகுமார் பதவி காலம் வரும் 18-ந் தேதி முடிவடைகிறது. மேலும் மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை ஆணையர், 2 ஆணையர்களைக் கொண்டது. பொதுவாக தேர்தல் ஆணையர்கள் அனைவருமே மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். தேர்தல் ஆணையர்களில் ஒருவர் மூப்பின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தார்.

Chief Election Commissioner Narendra Modi Rahul gandhi

இத்தகைய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது தேர்தல் ஆணையர்களை இனி பரிந்துரைக்க பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவை அமைத்தது.

ஆனால் மத்திய அரசோ இந்த உத்தரவுக்கு எதிராக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி தேர்தல் ஆணையர்கள் பரிந்துரைக் குழுவில் பிரதமர், ஒரு மத்திய அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெறுவர். இந்த புதிய சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான இயக்கம் உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவி காலம் வரும் 18-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு நாளை டெல்லியில் கூடுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிய இந்த குழுவுக்கு ஏற்கனவே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆகையால் தலைமை தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் நாளை முதல் வரும் 19-ந் தேதி வரை டெல்லி வட்டாரங்கள் பெரும் பரபரப்புடன் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+