கொரோனா தடுப்பு: 7 மாநில முதல்வர்களுடன் செப்.23-ல் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 23-ல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,149. இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 86,774 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 10,10,975 ஆகவும் உள்ளது.

மகாராஷ்டிராவில் மிக மோசம்
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 11,88,015 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 32,216 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,57,933.

ஆந்திரா, தமிழக பாதிப்பு
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,17,776; தமிழகம் 5,36,477. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,751. ஆந்திராவில் மொத்த மரணங்கள் எண்ணிக்கை 5,302.

பிரதமரின் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன் தளர்வுகள் ஆகியவை தொடர்பாக ஆக.11-ந் தேதியன்று கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஆந்திரா, கர்நாடகா,தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலுங்கானா மற்றும் உ.பி. மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

செப்.23-ல் மீண்டும் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து வரும் 23-ந் தேதி மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் டெல்லி, ம.பி. ஆந்திரா, உத்தரப்பிர்தேசம், பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications