பிரிட்டன் பிரதமராகும் ரிஷி.. வாழ்த்திய மோடி! இந்தியாவுக்கே பாடம் - குத்திக்காட்டிய ப சிதம்பரம்
டெல்லி: பிரிட்டன் பிரதமராக பதவியேற்க இருக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனகிற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
லிஸ் டிரஸ் பதவி விலகலை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்டும் போட்டியிட இருந்தனர்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 100க்கும் குறைவாக இருந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டாண்ட் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ரிஷி சுனக் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "ரிஷி சுனக்கிற்கு அன்பான வாழ்த்துக்கள்! நீங்கள் பிரிட்டன் பிரதமராக வரும்போது, சர்வதேச பிரச்சனைகளில் நெருக்கமாக பணியாற்றலாம் என்றும், இலக்கு 2030ஐ செயல்படுத்தலாம் எனவும் எதிர்நோக்குகிறேன். வரலாற்று உறவுகளை நவீன கூட்டாளியாக்கும், பிரிட்டன் வாழ் இந்தியர்களின் 'வாழும் பாலமாக' திகழ்பவருக்கு தீபாவளி வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் பதிவு
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் கமலா ஹாரிஸ். இன்று ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இது இந்தியா மற்றும் பெரும்பான்மைவாத கட்சிகளும் கற்க வேண்டிய பாடம்." என்று பதிவிட்டுள்ளார்.

சசி தரூர் ட்வீட்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "சிறுபான்மை இனத்தை சேர்ந்த நபரை மிகவும் சக்தி வாய்ந்த இடத்தில் அமர்த்தி பிரிட்டன் மக்கள் சர்வதேச அளவில் அரிய காரியத்தை செய்து இருக்கிறார்கள். இந்தியர்களான நாம் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆவதை கொண்டாட வேண்டும். நியாயமான ஒன்றை கேட்கிறேன். இங்கு இது நடக்குமா?" என்று பதிவிட்டுள்ளார்.

ராகவ் சத்தா
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், "இன்று இந்தியா 75 வது சுதந்திர ஆண்டில் தீபாவளியை கொண்டாடி வருகிறது. அதே நாளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் பிரிட்டனின் பிரதமராக இருக்கிறார். வரலாறு முழு வட்டம். ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications