எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் காக்க போராடிய முக்கிய படைவீரர் முலாயம் சிங் - பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி: உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமான நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
வட இந்தியாவில் சக்திவாய்ந்த கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இந்திய அளவில் அனுபவமும், பலமும் வாய்ந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும், 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலும் என 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் தந்தையான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலைவிட்டு விலகி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காலமானார் முலாயம்
தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ் மறைவால் உத்தரப்பிரதேச மக்கள், சமாஜ்வாடி தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேச மற்றும் தேசிய அரசியலில் புகழ்பெற்றவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காக்க போராடிய முக்கிய படைவீரர் அவர். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக வலுவான இந்தியாவை கட்டமைக்க உழைத்தவர். அவரது நாடாளுமன்ற பேச்சுக்கள் அறிவுசார்ந்ததாகவும், தேசிய நலனில் அக்கறை மிகுந்ததாகவும் இருக்கும்.

இரங்கல்
நாங்கள் வெவ்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்தபோது பல முறை உரையாடி இருக்கிறோம். இருவருக்கும் இடையிலான நெருக்கம் தொடர்ந்ததுடன் அவரது கருத்துக்களையும் எப்போதும் கவனித்து வந்தேன். அவரது மறைவு என்னை காயப்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன்." என்றார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications