டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜம்மு, உ.பி., தமிழகத்தில் வாரிசு அரசியல்.. இது ஜனநாயகத்திற்கு எதிரி.. பிரதமர் நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய எதிரியாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் நாங்கள் நாட்டின் முன்னேற்றத்தை நம்புகிறோம். மாநிலங்களின் பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். நான் முதல்வராகவும் இருந்ததால் மாநிலத்தின் லட்சியங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

முன்பு டெல்லிக்கு வரும் பல உலகத் தலைவர்களை நான் பல மாநிலங்களுக்கு அழைத்து சென்றேன். எனவே மாநில உரிமைகளை நான் மதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது. பாஜக தொடர்ந்து தோல்வியடைந்து பின்னர் வெற்றியடைய தொடங்கிவிட்டது. அடிதட்டு மக்களுடன் இணைய முயற்சிக்கிறோம். தோல்வி அடைந்தாலும் நாங்கள் நம்பிக்கையை தேடுகிறோம்.

5 மாநிலங்களிலும் பாஜக ஆதரவு அலை.. அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் - பிரதமர் மோடி நம்பிக்கை 5 மாநிலங்களிலும் பாஜக ஆதரவு அலை.. அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் - பிரதமர் மோடி நம்பிக்கை

மெருகேற்றிக் கொள்ள

மெருகேற்றிக் கொள்ள

எங்களை பொருத்தவரை தேர்தல்கள் என்பது திறந்த வெளி பல்கலைக்கழகங்கள் போன்றது. அதில் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பிருக்கும். நம்மை மெருகேற்றிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சில தலைவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறார்கள்.

சாதிக்கும் ஆசை

சாதிக்கும் ஆசை

நாட்டில் சாதிக்கும் ஆசையுடன் உள்ள 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம். இன்று பல மாவட்டங்கள் தேசிய சராசரியைவிட அனைத்து தரவுகளிலும் முன்னேறிவிட்டன. இதுதான் மாவட்டங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழியாகும். வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரியாகும். சமாஜ்வாதி கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு.

2022 இல் வெற்றி

2022 இல் வெற்றி

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாங்கள் வென்றோம். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு உ.பி. மாநில தேர்தலிலும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்றோம். உத்தரப்பிரதேசத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்தது. அந்த பழைய நடைமுறையை தற்போது மக்கள் மாற்றி எழுதியுள்ளார்கள். எங்களை 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்றார்கள். அதே போல் 2022 ஆம் ஆண்டும் எங்களை ஏற்பார்கள். எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

தமிழகத்தில் வாரிசு அரசியல்

தமிழகத்தில் வாரிசு அரசியல்

ஒரு கட்சியானது ஒரே குடும்பத்தை சேர்ந்த பல தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டால் அங்கு வாரிசு அரசியல்தான் இருக்கும். அந்த கட்சி எந்த வளர்ச்சியும் இருக்காது. ஜம்மு காஷ்மீரில் இரு வேறு குடும்பங்களால் இரு கட்சிகள் இருந்தன. இதே போல் ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்திலும் இதே வாரிசு அரசியல்தான் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

English summary
PM Narendra Modi says Dynastic politics is biggest enemy in democracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X