நாடே எதிர்பார்க்குதே.. மோடி இன்று மக்களவையில் பேசுகிறார்! நம்பிக்கையில்லா தீர்மானமே இதுக்கு தானே
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2 வது நாள் விவாதத்தில் ராகுல் காந்தி, அமித்ஷா உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில் இன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
குக்கி இன பழங்குடி மக்கள் மணிப்பூரில் மெய்தி இனத்தவரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த கொடூரங்கள் உலக அரங்கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. கடந்த சில வாரங்களுக்கு முன் பெண்களை நிர்வானப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், மக்களவை நிகழ்வுகளுக்கே பிரதமர் மோடி வராத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது.
ராகுல் காந்தி முதலில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் சார்பில் டிஆர் பாலு, சவுகதா ராய், திருமாவளவன் உட்பட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசினர்.
முதல் நாள் விவாதம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. இதில் பலரும் எதிர்பார்த்தது போல மதியம் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்றினார். மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டதாகவும், பாரத மாதாவையே அவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஆவேசமாக சாடினார்.
சுமார் 37 நிமிடங்கள் அனல் பறக்க உரையாற்றிய ராகுல் காந்தி, இறுதியில் சபாநாயகரை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்து சென்றது சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது பாஜக எம்பிக்கள் புகாரளித்துள்ளனர். அதை தொடர்ந்து கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உரையாற்றினர். மணிப்பூர் விவகாரம் மட்டுமின்றி, வேலையிழப்பு, மதவாத மோதல்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.
ராகுல் காந்தி பேசியவுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மாலை அமித்ஷா பேசினார். இந்த நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications