PM Modi Speech LIVE: ஆபரேஷன் சிந்தூர்.. பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி.. பிரதமர் மோடி உரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தின. தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறிய நிலையில் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. விமானப்படைத்தளங்கள் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.

இந்தியா அமைதியை விரும்புகிறது - பிரதமர் மோடி
பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டும்தான் பாகிஸ்தான் உடன் ஒரே பேச்சு. ஒவ்வொரு இந்தியரும் அமைதியை மட்டுமே விரும்புகின்றனர். ரத்தம் பாயும் நேரத்தில் தண்ணீரை பாய்ச்ச முடியாது. இன்று புத்த பௌர்ணமி இந்தியா புத்தர் வழியில் அமைதியை நாடுகிறது என பிரதமர் நரேந்திர மோடி உரை
ஒற்றுமையே இந்தியாவின் பலம் - பிரதமர் மோடி
புதுயுகப் போர் தந்திரங்களால் இந்தியா மிகவும் வலிமையாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் படைகள் மரியாதை செலுத்தியதை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும் எதிர்க்கும் அரசும் ஒன்றாக உறவாட முடியாது. ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு தொடக்கம்தான். நமது மிகப் பெரிய பலமே ஒற்றுமை தான் என பிரதமர் மோடி பேச்சு
போர் நிறுத்தம் தற்காலிகம் தான் - பிரதமர் மோடி
அடி தாங்க முடியாமல் பாகிஸ்தானியர்கள் நம்மை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்தியா அடித்து நொறுக்கியதால் போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் டிஜிஎம்ஓ நமது ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்த கோரிக்கை வைத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அடியால் தாக்குதலை நிறுத்துவதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட பின் நாம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம். போர் நிறுத்தம் தற்காலிகமானது தான். நமது படைகள் பாகிஸ்தானை கண்காணிக்கின்றன. இனிமேல் அவர்கள் அத்துமீறினால் முகத்திலேயே குத்துவோம் என பிரதமர் மோடி பேச்சு
கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் - மோடி
மே 7ஆம் தேதி காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது. பாரதத்தின் ஏவுகணைகள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தன. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அனைத்தையும் தகர்த்தோம். யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி பேச்சு
பஹல்காம் தாக்குதலால் மனவலி ஏற்பட்டது - பிரதமர் மோடி
அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், இந்த நாட்டின் மகள்களுக்கு இந்த வீரமான வெற்றியை அர்ப்பணிக்கிறேன். துளியும் கருணை இல்லாமல் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றனர். குடும்பத்தினர் கண்முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது என பிரதமர் மோடி பேச்சு
வீரப் படைகளுக்கு தலை வணங்குகிறேன்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி மக்களிடம் உரை. நமது வீரப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் குறிக்கோளை வெற்றிகரமாக எட்ட நடவடிக்கை எடுத்தார்கள். இந்திய ராணுவத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன். வீரப் படைகளின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்" என பிரதமர் மோடி பேச்சு












Click it and Unblock the Notifications