தமிழகத்துக்கு ரூ2,000 கோடி சிறப்பு நிதி - மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னை: தமிழகத்துக்கு ரூ2,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க மார்ச் 25-ந் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆனால் ஏப்ரல் 20-ந் தேதி முதலே லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை படிப்படியாக தளர்த்தப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

மோடி- முதல்வர்கள் ஆலோசனை
மத்திய அரசும் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மே 17-ந் தேதிக்குப் பின்னரும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? அல்லது சில கட்டுப்பாடுகள் மட்டும் நீடிக்குமா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தற்போது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

5-வது ஆலோசனை கூட்டம்
கொரோனாவுக்குப் பின் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய 5- வது ஆலோசனை கூட்டம் இது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே லாக்டவுன் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநில அரசும் மே 21-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டித்திருக்கிறது. இதனால் இன்றைய கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டது.

லாக்டவுனுக்குப் பின் பொருளாதாரம்
மேலும் லாக்டவுனுக்குப் பின்னர் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் மாநில முதல்வர்களின் கருத்தை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்தில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு இதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல பிற மாநில முதல்வர்களும் பொருளாதார மீட்புக்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் இன்று விவரித்தனர்.

ரூ2000 கோடி சிறப்பு நிதி
இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு ரூ2,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை முன்வைத்தார். மேலும் மத்திய அரசானது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும் என்றும் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications