உருமாற்றம் பெற்ற சென்ட்ரல் விஸ்டா அவென்யூ.. புதிய நேதாஜி சிலை.. திறந்து வைத்த பிரதமர் மோடி
டெல்லி: சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று இரவு 7.30 மணியளவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்படி மறு வடிவமைக்கப்பட்ட ராஜபாத் உள்ள புதிய சென்ட்ரல் விஸ்டா அவென்யூ இன்று திறக்கப்பட்டது.
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் இடையே எதிர்ப்பு அலையை சந்தித்தது.
2019ல் இதற்கான பணிகள் தொடங்கின. 2021, 2022 கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்வது விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு
ஆனால் இதை மத்திய அரசு அத்தியாவசியமான பணி என்று கூறியது. அதோடு மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது, இது அத்தியாவசிய பணி, அதனால் பணிகள் தொடர்ந்து நடக்கலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது அங்கு இருக்கும் ராஜபாதை எனப்படும் கர்தவ்யா பாத் மற்றும் சென்ட்ரல் விஸ்டா ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு
இந்த திட்டத்தின் பகுதியாக மொத்தமாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டன. இங்கு புதிய அலங்காரங்கள் செய்யப்பட்டன. புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் இங்கு புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டு வருகிறது. புதிய பிரதமர் அலுவலகம், மத்திய அரசு துறையின் பல்வேறு புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தை பிரதமர் மோடி ஏற்கனவே திறந்து வைத்துவிட்டார்.

புதிய சிலை
அதேபோல் கடந்த ஜூலை மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இன்று இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய ராஜ பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தியா கேட்டில் இருந்து நாடாளுமன்றம் வரை உள்ள நீண்ட சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 700 ஏக்கர் பரப்பிற்கு இங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.

திறந்து வைத்த பிரதமர் மோடி
புதிய அலங்காரம், விளக்குகள், நீர் நிலைகள், புதிய வகை செடிகள், சிவப்பு கிரானைட் கற்கள், 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் செல்லும் சாலைகள், 16 புதிய பாலங்கள் இந்த பாதையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத்தான் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். அதோடு இந்தியா கேட் அருகே புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் மோடி இன்று திறக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று இரவு 7 மணியளவில் பிரமாண்டமான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று திறந்து வைத்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications