மணிப்பூர் அங்கே எரிகிறது.. வெட்கமின்றி சிரித்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.. ராகுல் சரமாரி தாக்கு
டெல்லி: மணிப்பூர் பற்றி எரிகிறது, ஆனால், நாடாளுமன்றத்தில் நடுவே அமர்ந்துகொண்டு வெட்கமின்றி சிரித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின. இதைத்தொடர்ந்து லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சி எம்.பிக்களால் கொண்டு வரப்பட்டது.

3 நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று மாலை, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்தார். தனது பதிலுரையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரு வார்த்தையும் பேசாததைக் கண்டித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். எனினும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அவர்கள் வெளியேறிய பின்பு மணிப்பூர் பற்றிப் பேசினார் பிரதமர் மோடி.
இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் நேற்று 2.14 நேரம் உரையாற்றிய பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் குறித்து வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்திய ராணுவம் 2 நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்திருக்கும், ஆனால் கலவரத்தை தடுக்க பிரதமர் விரும்பவில்லை.
பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால், நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் தனது உரையின் பெரும்பாலான நேரம் நகைச்சுவை செய்து கொண்டிருந்தார். மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது.
மணிப்பூர் பல மாதங்களாக தீப்பற்றி எரிவதை பிரதமர் மறந்துவிட்டார். மணிப்பூர் எரிய வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றிச் சிரிக்கிறார் பிரதமர் மோடி.
மணிப்பூருக்கு பிரதமர் மோடி கட்டாயம் செல்ல வேண்டும். பாஜக அரசால் ஒரு மாநிலம் அழிக்கப்பட்டுள்ளது. நெருப்பை பற்ற வைக்க வேண்டும், பிரிக்க வேண்டும்; அதை வைத்து ஆட்சி செய்ய வேண்டும். இதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. பாரத மாதா மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக 'பாரத மாதா' என்ற வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாரத மாதா என்ன பாஜகவுக்கு மட்டும் சொந்தமா? இந்தியா எனும் கோட்பாட்டையே பாஜக கொன்றொழித்து விட்டது. மணிப்பூர் படுகொலை பாரத மாதா படுகொலைக்கு சமம்." என கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications