Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் யோசனைக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதி சந்திரசூட் யோசனையை பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றார். மகாராஷ்டிரா- கோவா வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியில் பேசுகையில் தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த கருத்தை தெரிவித்தார். இந்த கருத்து தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

PM Modi welcomes CJIs idea of making Supreme Court judgments available in regional languages

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டிஒய் சந்திரசூட் தெரிவித்த இந்த யோசனையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில், தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்காக செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை ஆகும். இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும்." என்று பிரதமர் கூறியுள்ளார்.

PM Modi welcomes CJIs idea of making Supreme Court judgments available in regional languages

பிரதமர் மேலும் கூறியிருப்பதாவது: "இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. அவை நமது கலாச்சார உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. தாய்மொழியில் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பை வழங்குவது உட்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது." இவ்வாறு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இப் பதிவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவதை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் உயர்நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் இருக்க வேண்டும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் வலயுறுத்தி உள்ளார்.

PM Modi welcomes CJIs idea of making Supreme Court judgments available in regional languages

டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் இதனை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது! உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் பாமர மக்கள் அறிந்து கொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறது!

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் ஏற்கனவே 17.07.2019-ஆம் நாள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் முடக்கப்பட்டு விட்டது. இப்போது தொடங்கப்படும் திட்டம் அதுபோல் இல்லாமல் தடையின்றி நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+