வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்போடு.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட மோடி.. நேரலை உரையில் நடந்தது என்ன?
டெல்லி: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு இந்த சட்டத்தின் நன்மைகளை புரிய வைக்க முடியாமல் சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
Recommended Video
விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வியாபாரம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்டன.
அந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இந்த மூன்று சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.

தொடர் எதிர்ப்பு
இந்த மூன்று சட்டங்கள் காரணமாக விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் என்பது மத்திய அரசின் வாதமாக இருந்தது. ஆனால் , விவசாய சங்கத்தினர் தங்களது விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். பஞ்சாப் , ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினார்கள்.

ஓராண்டு நிறைவு
தற்போது இந்த போராட்டம் ஒரு வருடத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் தான் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தார்.

மன்னிப்பு கேட்ட மோடி
மேலும் விவசாயிகளின் நலன் காக்க இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் , விவசாயிகளின் துன்பங்கள் என்ன என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த சட்டத்தின் நலன்கள் பற்றி விவசாயிகளின் ஒரு பிரிவினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். இதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மன்னிப்பு
அதே நேரம், ஓராண்டாக விவசாயிகள், பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். எனவே, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அதை விடுத்து இந்த சட்டங்களை புரியவைக்க முடியவில்லை என்பதால் வாபஸ் பெறுகிறேன் என்று கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் மோடி என்று காங்கிரஸ் ஆதரவு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
பிரதமர் மோடி விவசாயிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரி காங்கிரஸ் ஆதரவாளர்கள் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போராட்டக்களத்தில் விவசாயிகள் மீது போலீசார் அடக்குமுறை செய்த படங்களை அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications