டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் படைகளை குவிக்கும் சீனா.. திடீரென மோடிக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'முக்கியமான ஆலோசனைகளை' நடத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (இன்று) இரவு, நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அடுத்து, அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட மேலும் சில முக்கிய நாடுகளை ஜி7 கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

"ஆன்டிபா" தான் காரணம்.. ஆளுநர்கள் என்ன செய்கிறீர்கள்.. ராணுவத்தை இறக்க போறேன்.. டிரம்ப் கொக்கரிப்பு

மோடி டுவிட்டர்

மோடி டுவிட்டர்

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ள தகவல்கள்: அமெரிக்க அதிபரும், எனது நண்பருமான டொனால்டு டிரம்புடன் ஆக்கப்பூர்வமான, அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். ஜி7 உச்சி மாநாடு தொடர்பாகவும், கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றியும் அப்போது நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

செழுமையான நட்பு

செழுமையான நட்பு

செழுமை மற்றும் ஆழம் கொண்ட இந்திய அமெரிக்க நட்புறவு என்பது, கொரோனா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகான, உலக, கட்டமைப்பின்போது முக்கியமானதாக மாறும். இவ்வாறு நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு பதிலடியா

சீனாவுக்கு பதிலடியா

லடாக் எல்லையில், சீனா அதிகப்படியான படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டிய நிலையில், டொனால்ட் ட்ரம்ப், மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மோடியும் தனது டுவிட்டர் பதிவில், ஜி7 மாநாடு மட்டுமல்லாது மேலும் பல விஷயங்களை பேசியதாக கூறியுள்ள கருத்து வெளியுறவு நிபுணர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது. இந்த உரையாடலும், மோடியின் டுவிட்டர் பதிவும், சீனாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. மோடியுடன், சீன விவகாரம் குறித்து பேசியதாக சில தினங்கள் முன்பு ட்ரம்ப் தெரிவித்தார். மோடி நல்ல மூடில் இல்லை என்றும் கூறினார். இதை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் மறுத்தன. இப்போது மோடி-ட்ரம்ப் உரையாடலை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

English summary
PM Narendra Modi had a telephone conversation today with US Pres Donald Trump. Pres Trump extended an invitation to PM Modi to attend the next G-7 Summit to be held in USA: Prime Minister's Office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X