மாஸ் அறிவிப்பு! அடுத்து 1.5 ஆண்டில்.. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.. பிரதமர் மோடி!
டெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு அடுத்த 1.5 ஆண்டில் 10 லட்சம் பேருக்கு தேர்வு செய்யப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு இலங்கையை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
இலங்கைக்கு இந்தியா தான் முடிந்தவரை உதவி வருகிறது. இதை அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.

வேலைவாய்ப்பு
இலங்கை அளவுக்கு மோசமாக இல்லை என்றாலும் கூட, இந்தியாவிலும் கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இருக்கவே செய்கிறது. பண வீக்கம் அதிகரிப்பதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், வேலைவாய்ப்பின்மையும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைச் சரி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

அச்சம்
வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, குற்றங்கள் அதிகரிக்கவும் கூட ஒரு காரணமாக அமையலாம் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் இது குறித்து பிரதமர் மோடி அரசுத் துறைகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். மத்திய மாநில அரசுப் பணிகளில் பல்வேறு காலியிடங்கள் பல காலமாக நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கிடையே மத்திய அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி
இதனிடையே மோடி அரசு அடுத்த 1.5 ஆண்டுகளில் பல்வேறு மத்திய அரசுத் துறைகள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்களில் 10 லட்சம் பேரை பணிக்கு எடுக்கும் எனப் பிரதமர் அலுவலகம் காலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

10 லட்சம் வேலைவாய்ப்புகள்
பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில் அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த வேண்டும் எனப் பிரதமர் மோடி அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தினார்" என்று கூறப்பட்டுள்ளது.

முக்கியம்
வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அரசு துறைகளுக்கு இப்படியொரு அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், பல்வேறு துறைகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் கொட்டிக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications