ரொம்ப முக்கியமான டைம்! அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. டொனால்டு டிரம்புடன் 13 ஆம் தேதி மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க உள்ளார். வரும் 13 ஆம் தேதி அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, அன்றைய தினம் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். அன்று இரவு பிரதமர் மோடிக்கு டிரம்ப் இரவு உணவு விருந்து அளிக்க இருக்கிறார். மறுநாள் அமெரிக்காவில் தொழிலதிபர்களுடனும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இன்று 205 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

america modi donald trump

மோடி அமெரிக்கா பயணம்

பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் வழியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்பை பிரதமர் மோடி 13 ஆம் தேதி சந்திக்கிறார். அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு டிரம்ப் இரவு உணவு விருந்து அளிக்க இருக்கிறார். மறுநாள் அமெரிக்காவில் தொழிலதிபர்களுடனும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். "பிரிக்ஸ் நாடுகள் புதிய கரன்சியை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தை ஆதரிக்கவோ முடிவு செய்தால் அந்த நாடுகள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

205 இந்தியர்கள் நாடு கடத்தல்

இந்தியா உள்பட 10 உறுப்பு நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ளன. மறைமுகமாக இந்தியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக டிரம்ப் இவ்வாறு கூறியிருந்தார். அதேபோல, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக 205 இந்தியர்கள் அமெரிக்காவின் ராணுவ விமானம் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலுக்கு மத்தியில் தான் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு நாட்டு தலைவர்களுடனான இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. பிரதமர் மோடி - டிரம்ப் இடையே நடைபெற உள்ள சந்திப்பு சர்வதேச அளவிலும் உன்னிப்பாக கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+