இன்று இரவு 8 மணிக்கு.. நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை.. தீயாக பரவும் தகவல்.. உண்மையில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு, தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்த போகிறார் என்ற தகவல் தீ போல பரவி வருகிறது.

கொரோனா நோய் பரவல் நாடு முழுக்க அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மக்கள் ஊரடங்கு அல்லது வேறு மாதிரி உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்கக் கூடும் என்று ஒரு வதந்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதன் விளைவாக மக்களிடையே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் சுயமாக மக்கள் வீடுகளுக்குள் இருந்து கொள்ளுமாறு மோடி தொலைக்காட்சியில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார்.

தொலைக்காட்சிகளில் மோடி

தொலைக்காட்சிகளில் மோடி

ஓராண்டு கழித்து விட்ட நிலையில் இப்போது மீண்டும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால்தான் புதன்கிழமை இன்று இரவு 8 மணிக்கு நரேந்திரமோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்ற போகிறார் என்ற வதந்தி பரவி வருகிறது.

மோடி உரையில்லை

மோடி உரையில்லை

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களிடம் கேட்டபோது மோடி இன்று அவ்வாறு எந்த ஊரையும் நிகழ்த்த வில்லை என்று தெரிவித்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இது தேர்தல் காலம் ஆகும். இப்போது ஊரடங்கு உத்தரவு போன்றவற்றை மத்திய அரசு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவான அட்வைஸ்

பொதுவான அட்வைஸ்

இருப்பினும் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது நோய் பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் எந்த மாதிரி சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய பொதுவான ஒரு அறிவுரையை மோடி வழங்குவார் என்று தெரிகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

இருப்பினும் இன்று இரவு 8 மணிக்கு மோடி பேசுவார் என்று வெளியாகியுள்ள தகவல்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்ட தகவல்கள் கிடையாது. வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக மக்களிடம் இது போன்ற கேள்வி எழுந்து உள்ளது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+