“பாரதியார் என்ன சொன்னார்னா?” மன் கி பாத்தில் என்ன பேசினார் பிரதமர் மோடி? யார் அந்த டிரோன் தீதி
டெல்லி: தனது 110 வது மனதின் குரல் வானொலி உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகாகவி பாரதியாரின் பாடலை நினைவுகூர்ந்து பெண் சக்தி குறித்து பேசி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு தொடர்ந்து மன் கி பாத் என்ற பெயரில் மாதம் ஒருமுறை ஞாயிறு அன்று உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று பேசிய அவர், "மனதின் குரலின் 110 ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச்செய்வது என்பது தான்.

ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய தகவல்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை. நண்பர்களே, சில நாட்கள் கழித்து மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்த விசேஷமான நாளானது, தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பெண் சக்தியின் பங்களிப்பைப் போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது.
பெண்களுக்கு சமமான சந்தர்ப்பம் வாய்க்கப்பெறும் போது மட்டுமே உலகம் தன்னிறைவு பெற்றதாக ஆகும் என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார். இன்று பாரதத்தின் பெண் - சக்தி என்பது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது. நமது தேசத்திலே, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் எல்லாம் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகள் முன்பு வரை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா!! ஆனால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது.
இன்று, கிராமங்கள்தோறும் ட்ரோன் திதீ எனும் இந்தப் பெண்களைப் பற்றியே பேச்சாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காணும் போது, இந்த முறை மனதின் குரலில், ஒரு நமோ ட்ரோன் தீதியோடு நாம் ஏன் உரையாடக் கூடாது என்று நான் சிந்தித்தேன். நம்மோடு இந்த வேளையிலே, நமோ ட்ரோன் தீதியான சுனிதா அவர்கள் இணைந்திருக்கிறார். இவர் உத்திர பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர், வாருங்கள், அவரோடு நாம் உரையாடுவோம்." என்றார்.
மத்திய அரசின் பிஐபி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள அந்த உரையாடல் பின்வருமாறு,
"மோடி: சுனிதா தேவி அவர்களே, உங்களுக்கு வணக்கம்.
சுனிதா தேவி: வணக்கம் சார்.
மோடி: சரி சுனிதா அவர்களே, முதல்ல நீங்க உங்க குடும்பம் பத்தி, உங்க பின்னணி பத்தி சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.
சுனிதா தேவி: சார், எங்க குடும்பத்தில ரெண்டு பிள்ளைங்க, நான், என் கணவர், எங்கம்மா.... இவங்க எல்லாம் இருக்காங்க.
மோடி: நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க சுனிதா ஜி.
சுனிதா தேவி: சார், பி.ஏ. (இறுதியாண்டு) வரை.
மோடி: அப்புறம் வேலை எனும் போது, வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யறீங்க?
சுனிதா தேவி: வேலைன்னா, விவசாயம் தானுங்கய்யா, வயல் வேலை.
மோடி: சரி சுனிதா ஜி, இந்த ட்ரோன் தீதியாகற உங்க பயணம் எப்படி தொடங்கிச்சு. உங்களுக்கு எங்க பயிற்சி கொடுத்தாங்க, என்ன மாதிரியான மாற்றம் எல்லாம் ஏற்பட்டிருக்கு, எனக்கு தொடக்கத்திலேர்ந்து ஒண்ணு விடாம சொல்லுங்க.
சுனிதா தேவி: கண்டிப்பா சார். பயிற்சி இங்க நம்ம ஃபூல்புர் இஃப்கோ கம்பெனியில குடுத்தாங்க இலாஹாபாதில, அங்க தான் பயிற்சி கிடைச்சுது.
மோடி: அதுக்கு முன்னால நீங்க ட்ரோன் பத்தி ஏதும் முன்னபின்ன கேள்விப்பட்டிருந்தீங்களா?
சுனிதா தேவி: சார், கேள்விப்பட்டது கிடையாதுங்க. ஆனா ஒருமுறை மட்டும் சீதாபுர்ல இருக்கற கிருஷி விஞ்ஞான் கேந்திரத்தில பார்த்திருக்கேன். அப்பத் தான் முத முறையா ட்ரோனை நான் பார்த்தது.
மோடி: சுனிதா ஜி, அது தான் நீங்க முதமுறையா அங்க போனது, சரிதானே!!
சுனிதா தேவி: ஆமாங்க.
மோடி: முத நாள் உங்களுக்கு ட்ரோனை காண்பிச்சிருப்பாங்க, பிறகு பலகையில எழுதிப் போட்டு கத்துக் குடுத்திருப்பாங்க, காகிதத்தில எழுதி படிக்க வச்சிருப்பாங்க, பிறகு மைதானத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, பயிற்சி குடுத்திருப்பாங்க, இது எல்லாத்தைப் பத்தியும் விவரமா சொல்லுங்களேன்.
சுனிதா தேவி: கண்டிப்பா சொல்றேன் சார். முத நாளன்னைக்கு நாங்க போன அடுத்த நாளிலிருந்து, எங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல கோட்பாடு கத்துக் குடுத்தாங்க, பிறகு ரெண்டு நாள் வரை வகுப்பு நடத்தினாங்க. வகுப்புல ட்ரோன்ல என்னென்ன பாகங்கள் இருக்கு, எப்படிஎப்படி இயக்கறதுன்னு, எல்லா விஷயங்களும் கோட்பாடு வகுப்புல நடத்தினாங்க. 3ஆவது நாளன்னைக்கு சார், எங்களுக்கு தேர்வு வச்சாங்க, அதுக்குப் பிறகு கணிப்பொறியிலயும் ஒரு தேர்வு வச்சாங்க. அதாவது முதல்ல வகுப்பு எடுப்பாங்க, பிறகு தேர்வு எழுதச் சொல்லுவாங்க. பிறகு தான் களப்பயிற்சி; அதாவது எப்படி ட்ரோனை எழும்பச் செய்யணும், எப்படி அதைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும் மாதிரியான விஷயங்கள் எல்லாம் இந்தக் களப்பயிற்சியில கத்துக் கொடுத்தாங்க.
மோடி: பிறகு ட்ரோன் என்ன வேலை செய்யும்னு கத்துக் கொடுத்தாங்களா?
சுனிதா தேவி: சார் கண்டிப்பா. அதாவது பயிர் இப்ப அறுவடைக்கு தயாராயிட்டு இருக்கு, இப்ப மழை இல்லை ஏதோ காரணத்தால வயல்ல எங்களால, இல்லை வேலையாட்களால நுழைய முடியலைன்னா இவை வாயிலா ரொம்ப ஆதாயங்கள் விவசாயிகளுக்கு ஏற்படும், வயல்ல நாங்க நுழைய வேண்டிய அவசியமே இல்லை. நாம வரப்பு மேல நின்னுக்கிட்டு, வயல்ல ஏதும் புழுபூச்சி நுழைஞ்சிருக்கா, நாம என்ன முன்னெச்சரிக்கை எடுக்கணும், எல்லாத்தையும் நமக்குப் புட்டுபுட்டு வச்சிடும், விவசாயிகளுக்கும் ரொம்ப உதவிகரமா இருக்கும். சார், இந்த ட்ரோனை வச்சு நாங்க இதுவரைக்கும் 35 ஏக்கருக்கு ஸ்ப்ரே செஞ்சிருக்கோம்.
மோடி: அப்ப இதனால பயனிருக்குன்னு விவசாயிகளுக்கும் புரியுதா?
சுனிதா தேவி: கண்டிப்பா சார். விவசாயிகளுக்கு ரொம்ப சந்தோஷம், அவங்க இதை ரொம்ப பாராட்டிப் பேசறாங்க. இதனால நேரமும் மிச்சப்படுது, எல்லா வேலைகளையும் இதுவே பார்த்துக்குது. தண்ணி, மருந்துன்னு எல்லாத்தையும் இதுவே பார்த்துக்குது, நாம வந்து வயலோட அளவு, எல்லையை சொன்னா மட்டும் போதும், எல்லா வேலையையும் அரை மணி நேரத்தில செஞ்சு முடிக்க முடியுது.
மோடி: அப்ப இந்த ட்ரோனை பார்க்கவே ஆளுங்க வந்து போவாங்க இல்லை?
சுனிதா தேவி: சார், அதை ஏன் கேக்கறீங்க. ட்ரோனைப் பாக்கவே ஏகப்பட்ட பேருங்க வராங்க. வயல்ல மருந்தடிக்க உங்களைக் கூப்பிடறோம், உதவி செய்யுங்கன்னு பெரியபெரிய விவசாயிகள்லாம் என்கிட்டேர்ந்து நம்பர் வாங்கிட்டுப் போறாங்க.
மோடி: நல்லது. நான் ஏன் இதைக் கேக்கறேன்னா, லட்சாதிபதி தீதியை உருவாக்கறதுங்கற ஒரு இலக்கு எனக்கு இருக்கு. இன்னைக்கு நீங்க பேசறதை, ஒரு ட்ரோன் தீதி முதமுறையா என் கூட பேசறதை நாடு முழுக்க இருக்கற சகோதரிகள் கேட்டுக்கிட்டு இருக்காங்க, அவங்க கிட்ட நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
சுனிதா தேவி: இன்னைக்கு நான் ஒரே ஒரு ட்ரோன் தீதியா இருக்கலாம், ஆனால் என்னை மாதிரியே ஆயிரக்கணக்கான சகோதரிகள் முன்வந்து என்னை மாதிரியே ட்ரோன் தீதியா ஆகணும், என் கூட ஆயிரக்கணக்கான நபர்கள் இணையும் போது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும், நம்ம எல்லாருக்கும் ட்ரோன் தீதிங்கற அடையாளம் கிடைக்கும்.
மோடி: சரி சுனிதா அவர்களே, உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த நமோ ட்ரோன் தீதி, இவர் தேசத்தின் விவசாயத்தை நவீனமயமாக்கும் ஒரு மிகப்பெரிய ஊடகமாக ஆகி வருகிறார். என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
சுனிதா தேவி: நன்றி சார். ரொம்ப நன்றி.
மோடி: நன்றிம்மா." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications