ஒட்டுண்ணி காங்கிரஸ், சிறுபிள்ளையாக அழுத ராகுல் காந்தி.. லோக்சபாவில் வெளுத்த மோடி- 15 பாயிண்ட்ஸ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியை மிக மிக கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி கட்சி என்றார்; எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள் செய்கிறவர் எனவும் விமர்சித்தார் பிரதமர் மோடி.

லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்கள்:
- லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது.
- எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்குதான் காங்கிரஸுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 100-க்கு 99 இடங்களைப் பெறவில்லை. 543-க்கு 99 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது.
- ஒட்டுண்ணி கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். தமது கூட்டணிக் கட்சிகளை நம்புகிற ஒட்டுண்ணியாகவே இருக்கிறது காங்கிரஸ். கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் காங்கிரஸ் வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளது.
- தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 13 மாநிலங்களில் ஒரு இடம் கூட பெற முடியாத காங்கிரஸ் தம்மை ஹீரோவாக காட்டிக் கொள்கிறது.
- தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் 2-வது இடத்தை பாஜக பெற்றுள்ளது. கேரளாவில் பாஜகவின் கணக்கு தொடங்கிவிட்டது.
- நாட்டு மக்கள் மீது சர்வாதிகாரத்தை திணித்த கட்சிதான் காங்கிரஸ். நாட்டின் அரசியல் சாசனத்தை ஒடுக்கியதும் காங்கிரஸ்தான்.
- எதிர்க்கட்சிகள் இந்துக்களை இழிவுபடுத்துகின்றனர். இந்துக்களை இழிவுபடுத்துகிற எதிர்க்கட்சிகளின் சதி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்து மதத்தை காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் (திமுக) அவமதித்த போது ஆதரித்தவர் ராகுல் காந்தி.
- லோக்சபாவில் ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமான நடந்து கொண்டார். பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தை போல ராகுல் காந்தி நேற்று அழுததை நாம் பார்த்தோம்.
- மக்கள் என்ன தீர்ப்பு அளித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக பொய்யாக சித்தரிக்கக் கூடாது.
- லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து 3 முறை தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் தோல்விகளில் காங்கிரஸ் உலக சாதனையே படைத்துக் கொண்டிருக்கிறது.
- ராகுல் காந்தி ஓபிசி ஜாதியினரை அவமதித்தார். அந்த வழக்கில் ஜாமீனில்தான் ராகுல் வெளியே இருக்கிறார். வீர சாவர்க்கரை அவமதித்து பேசிய வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
- நாடாளுமன்றத்தை ராகுல் காந்தி தவறாகவே வழிநடத்துகிறார். அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களையே ராகுல் காந்தி லோக்சபாவில் பேசினார்.
- சிறுபிள்ளைத்தனமாக ராகுல் காந்தி பேசினார். அதற்காக ராகுல் காந்தி பொய் பேசுவதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்?
- போர் விமானங்களை வாங்கியபோது அலட்சியம் செய்து விமர்சித்தது காங்கிரஸ். ஒரே நாடு- ஒரே ஓய்வூதியம் திட்டத்தையும் எதிர்த்ததும் காங்கிரஸ்தான். இந்த தேசத்தின் ராணுவம் பலவீனமடையவே காங்கிரஸ் விரும்புகிறது.
- ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை என்கிற எங்கள் கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்து வருகின்றனர். 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்துள்ளோம்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications