சீனா, ஈரான் அதிபர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு... பிரதமர் மோடி ரஷ்யா பயணம்
டெல்லி: சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ரஷ்யாவின் கசான் நகரத்தில் நடைபெறும் இந்த மாநாட்டின் கருப்பொருள் உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு வலுப்படுத்துதல் என்பதாகும்.
பிரிக்ஸ் உச்சி மாநாடு என்பது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை உருவாக்கிய கூட்டமைப்பாகும். இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, ஈரான், சீனா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேற்குலக நாடுகளுக்கு எதிரான ஒரு கூட்டமைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் மசூத் ரஜாவி, சீனா அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறுவது கவனம் பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
15-வது பிரிக்ஸ் மாநாடு தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்ஸ் மிக நீண்ட மற்றும் மகத்துவமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் நாங்கள் பல சாதனைகளை செய்துள்ளோம்.
எமது புதிய வளர்ச்சி வங்கி உலகளாவிய தென்பகுதி நாடுகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. அவசரத் தேவைக்கான இருப்பை உறுதி செய்திருப்பதன் மூலம் நாங்கள் ஒரு நிதிப் பாதுகாப்பு பிணைப்பை உருவாக்கியுள்ளோம்.
பிரிக்ஸ் செயற்கைக்கோள் அமைப்பு, தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், மருந்து தயாரிப்புகளுக்கு பரஸ்பர அங்கீகாரம் போன்ற முன்முயற்சிகள் மூலம், பிரிக்ஸ் நாடுகளின் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம்.
இளைஞர் மாநாடு, பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள், சிந்தனைக் குழுக்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம், அனைத்து நாடுகளுக்கும் இடையிலான, மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தி வருகிறோம்.
ரயில்வே ஆராய்ச்சி நெட்வொர்க், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, ஆன்லைன் பிரிக்ஸ் தரவுத்தளம், ஸ்டார்ட்அப் மன்றம் ஆகியவை பிரிக்ஸ் நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு புதிய திசையை வழங்க இந்தியா வழங்கிய சில பரிந்துரைகளாகும என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications