உக்ரைன் போர்.. 2 மணி நேரம் நீடித்த பிரதமர் மோடியின் மீட்டிங்.. விவாதிக்கப்பட்டது என்ன? பரபர தகவல்
டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி சுமார் 2 மணி நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் தொடங்கி உள்ளது.
தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டில் இருக்கும் பல முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ள போதிலும், உக்ரைன் ராணுவம் அஞ்சாமல் துணிச்சலாகப் போராடி வருகிறது. குறிப்பாக சில நகரங்களை மீண்டும் மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே ரஷ்யாவும் உக்ரைனும் பெலாரஸ் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை
இந்தச் சூழலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நீட்டித்த இந்த கூட்டத்தில் அங்குள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்க முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்காக அண்டை நாடுகள் உடனான ஒத்துழைப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் பிரசாரத்தில் முடித்துவிட்டுத் திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்

நேரடியாக கண்காணிக்கும் பிரதமர்
உக்ரைன் நாட்டில் இருந்து மாணவர்கள் அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், "உக்ரைன் அண்டை நாடுகளின் உதவியுடன் மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியே இந்த நடவடிக்கையைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். அங்குள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் உக்ரைன் அண்டை நாடுகளுக்குச் சிறப்புக் குழுக்களை அனுப்பியுள்ளோம். தற்போதைய நிலைமை சிறப்புக் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகிறோம்" என்றார்.

சிறப்பு விமானங்கள்
ஏற்கனவே, உக்ரைனில் இருந்து ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்குத் தரைவழியாக வந்த மாணவர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 5 மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து மார்ச் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 மீட்பு விமானங்களை இயக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications