லோக்சபா: எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி முழக்கங்களுக்கு நடுவே தொடர்ந்து பேசிய மோடி- தமிழில் கோஷம்!
டெல்லி: லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றினார். ஆனால் பிரதமர் மோடி பேசத் தொடங்கியது முதலே எதிர்க் கட்சி எம்பிக்கள் இடைவிடாமல் உரத்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இந்த முழக்கங்களுக்கு நடுவேதான் பிரதமர் மோடி பதில் உரையாற்றினார்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 27-ந் தேதி உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

ராகுல் பேச்சுகள் நீக்கம்: லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி. அப்போது 50-க்கும் மேற்பட்ட முறை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் குறுக்கிட்டு பதிலளித்தனர். இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரும் பாஜகவை மிக கடுமையாக தாக்கிப் பேசினர். ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் தற்போது சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ராஜ்யசபா: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றினார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார் கார்கே. அவரது பேச்சின் சில பகுதிகளும் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
#WATCH | PM Narendra Modi says, "The public has chosen us in the world's largest election campaign and I can understand the pain of some people. Despite spreading lies continuously, they suffered a huge defeat." pic.twitter.com/RFEtG1EVL6
— ANI (@ANI) July 2, 2024
மோடி பேச்சும் எதிர்ப்பும்: இந்த நிலையில் லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றினார். பிரதமர் மோடி பேசத் தொடங்கியதுமே- எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடித்து மக்கள் தங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார். இதற்கு எதிராக, ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒருங்கிணைந்து உரத்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் சில நிமிடங்கள் தமது பேச்சை நிறுத்தினார் மோடி. பின்னர் எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே தொடர்ந்து உரையாற்றினார் பிரதமர் மோடி. மணிப்பூர் மணிப்பூர் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
தமிழில் முழக்கம்: லோக்சபாவின் மையப் பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூருக்கு நீதி கோரி முழங்கினர். மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். தமிழக எம்பிக்கள், நீதி வேண்டும் நீதி வேண்டும் மணிப்பூருக்கு நீதி வேண்டும் என தமிழில் முழக்கம் எழுப்பினர்.
சபாநாயகர் எச்சரிக்கை: ஒரு கட்டத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கோபத்துடன் எதிர்க்கட்சி எம்பிக்கள்:ஐ அமைதியாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். அதன் பின்னர் கைகளை தட்டியபடியே முழக்கங்களை எழுப்பினர் எதிர்க்கட்சி எம்பிக்கள்.
மோடி ஆலோசனை: முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர் எம்பிக்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications