இன்று நைஜீரியா புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி.. பிரேசில், கயானாவுக்கும் விசிட்.. ஏன் முக்கியம்?
டெல்லி: அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று ( நவம்பர் 16) நைஜிரியா புறப்பட்டுச் செல்கிறார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். பின்னர், பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர அரசு முறைப் பயணமாக 3 நாடுகளுக்குச் செல்கிறார். இன்று நைஜீரியா புறப்பட்டுச் செல்கிறார் மோடி. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1996க்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை பெறுகிறார் நரேந்திர மோடி.

இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேச உள்ளார் பிரதமர் மோடி. நாளை நவம்பர் 17 ஆம் தேதி நைஜீரியா நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச உள்ளார் பிரதமர் மோடி.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான நைஜீரியா, அதன் பெட்ரோலியத் துறையை மாற்றியமைத்துள்ளது, நீண்ட காலமாக ஊழல் மற்றும் திறமையின்மையால் வளர்ச்சி தடைபட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து உற்பத்தியை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், அங்கு பிரதமர் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பிரேசில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனிரோ நகரில் 18 ஆம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் உட்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
பிரேசிலை அடுத்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி அந்த நாட்டுக்கு செல்கிறார். 20 ஆம் தேதி அதிபர் இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழலில் கடந்த சில நாட்களாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்த பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக இன்று தொடங்கி மூன்று நாடுகளுக்குச் செல்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications