நீதிமன்ற உத்தரவை மீறிய எஸ்பிஐ! கால தாமதம் செய்ததற்கு இதுதான் காரணமா? அரசியல் விமர்சகர்கள் விளக்கம்
டெல்லி: தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ வங்கிக்கு கூடுதல் அவகாசம் கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ கால தாமதம் கோருவதற்கான காரணத்தை அரசியல் விமர்சகர்கள் விளக்கியுள்ளனர்.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.

இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வெளியிட்டது.
நீதிமன்ற தடை: 'தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதை பெற்று தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குற்றச்சாட்டுகள் என்ன?: தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ11,733 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இதில் பாஜக மட்டும் ரூ.6,566 கோடி பெற்றிருக்கிறது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 58.5% நிதி பாஜவுக்கும் மட்டும் கிடைத்திருந்தது. பாஜக தவிர காங்கிரஸ் ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடியும் நன்கொடையாக பெற்றிருக்கிறது. இந்த விஷயம்தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியது.
தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. இதில் சமபலத்துடன்தான் அரசியல் கட்சிகள் மோத வேண்டும். ஆனால், இந்த தேர்தல் பத்திரம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு (பாஜக) மட்டும் அதிக வாய்ப்புகளை வழங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.
எஸ்பிஐ தாமதம்: இப்படி இருக்கையில் தேர்தல் பத்திரங்களை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை எவ்வளவு? யார் யாரிடமிருந்து இந்த கட்சிகள் நிதியை பெற்றிருக்கின்றன? என்கிற விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதில் எஸ்பிஐ தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான இன்றைய வழக்கு விசாரணையில், "நாளைக்குள் (மார்ச்.12) தேர்தல் ஆணையத்திடம் SBI பத்திர விவரங்களை வழங்க வேண்டும். பின்னர் மார்ச்.15-ம் தேதி தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் விவரங்களை வெளியிட வேண்டும். உத்தரவை செயல்படுத்த தவறினால் SBI அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ தாமதம் ஏன்?: உச்சநீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு எஸ்பிஐ ஏன் கால தாமதம் செய்தது என்பதற்கு பத்திரிகையாளர் தராசு ஷியாம் விளக்கமளித்திருக்கிறார். அதாவது, "தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதி அளவில் மிகப்பெரியது. இதை வழங்கியவர்கள் பொருளாதார குற்றவாளிகள் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற ஆட்களிடமிருந்து நிதி பெறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகதான் எஸ்பி கால தாமதம் செய்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு யார் யார் நிதி கொடுத்தார்கள் என்கிற விவரங்கள் வெளியானால், அது வாக்கு வங்கியை பாதிக்கும் என்கிற அச்சம் காரணமாக எஸ்பிஐ வங்கியை வேண்டுமென்றே காலத்தாமதம் செய்ய, மத்திய அரசு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications