டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Delhi Exit Poll: டெல்லியில் ஆம் ஆத்மி அலை.. அடித்து சொல்லும் எக்ஸிட் போல் முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் யாருக்கு? இதுதான் அனைவர் மனதிலும் உள்ள கேள்வி! டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தாச்சு. இப்போ ஆட்சியை பிடிப்பது யார் என்பதுதான், அடுத்த கேள்வி.

டெல்லியில் 5 வருடங்களாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகம் என தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பலவும் கூறின. ஆனால் எப்போதுமே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்தான், ரிசல்ட்டுக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும். எனவே எக்சிட் போல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புக்கும் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். அதேசமயம், இந்த தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்திக்கும் என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Newest First Oldest First
7:56 PM, 8 Feb

டெல்லியில் ஆம் ஆத்மி 68 தொகுதிகளை வெல்ல கூடும்- இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல். பாஜக 2 தொகுதிகளை வெல்ல கூடும், காங்கிரஸ் பூஜ்யம் - இந்தியா டுடே.
6:58 PM, 8 Feb

ஆம் ஆத்மிக்கு 62 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு. பாஜகவுக்கு அதிகபட்சம் 19 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 4 இடங்கள் கிடைக்கலாம் - ஏபிபி சிவோட்டர் எக்ஸிட் போல்.
6:46 PM, 8 Feb

ஆத் ஆத்மிக்கு 48 முதல் 61 இடம் கிடைக்க வாய்ப்பு. பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள் வரை கிடைக்கலாம். காங்கிரஸுக்கு ஒரே ஒரு சீட் கிடைக்க வாய்ப்பு - ரிபப்ளிக் டிவி ஜன் கி பாத் எக்ஸிட் போல்.
6:45 PM, 8 Feb

ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள் பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள்
6:45 PM, 8 Feb

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 45 சீட் கிடைக்கும். பாஜகவுக்கு 24 முதல் 28 சீட் கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 3 சீட் கிடைக்க வாய்ப்பு சுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல்.
6:39 PM, 8 Feb

டெல்லி - ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும். பெரும்பான்மைக்கு தேவை 36 - ஆம் ஆத்மி குறைந்தது 40 தொகுதிகளில் வெல்லும் - எக்ஸிட் போல் முடிவுகள்
6:36 PM, 8 Feb

டெல்லி சட்டசபையை ஆம் ஆத்மி மீண்டும் கைப்பற்றும். ஆம் ஆத்மிக்கு 44 இடங்கள் வரை கிடைக்கும். பாஜகவுக்கு 26 சீட் கிடைக்கலாம். காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது - டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் கணிப்பு.
6:35 PM, 8 Feb

ஆம் ஆத்மிக்கு 53 முதல் 57 இடங்கள் கிடைக்கலாம். பாஜகவுக்கு 11 முதல் 17 இடங்களே கிடைக்கும். காங்கிரஸுக்கு அதிகபட்சம் 2 இடம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு - நியூஸ் எக்ஸ் நேத்தா .
6:33 PM, 8 Feb

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு அபார வெற்றி- நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல்
6:13 PM, 8 Feb

மாலை 6 மணிவரை 54.65% வாக்குகள் பதிவு
6:13 PM, 8 Feb

2105 சட்டசபை தேர்தலில் 63.5% வாக்குகள் பதிவாகி இருந்தன
6:05 PM, 8 Feb

கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பு
6 மணிக்கு மேல் பல்வேறு டிவி சேனல்களும் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட உள்ளன. இந்தியா டுடே, டைம்ஸ் நவ் போன்ற முன்னணி சேனல்கள், முன்னணி கருத்துக் கணிப்பு ஏஜென்சிகள் உதவியுடன் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட உள்ளன.
6:02 PM, 8 Feb

வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்தது, வாக்குச்சாவடிகளுக்குள் உள்ளவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது
5:56 PM, 8 Feb

மந்த நிலை

டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5:30 மணி வரை 52.95% வாக்குப்பதிவு
5:30 PM, 8 Feb

ஷாஹின்பாக்கில் அமைதி

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களின் மையப்புள்ளியாக உள்ள ஷாஹின்பாக் பகுதியிலுள்ள பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது
5:24 PM, 8 Feb

மாலை 5 மணி நிலவரம்

டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி வரை 44.52% வாக்குப்பதிவு
4:32 PM, 8 Feb

4 மணி நிலவரம்

டெல்லி சட்டசபை தேர்தலில் மாலை 4 மணி வரை 42.70% வாக்குப் பதிவாகியுள்ளது
3:18 PM, 8 Feb

பிற்பகல் 3 மணிவரை 30.18% வாக்குகள் பதிவு
3:01 PM, 8 Feb

டெல்லி

டெல்லி தொகுதியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாக்களித்தார்
2:37 PM, 8 Feb

பகல் 2 மணி வரை 28.14 % வாக்குகள் பதிவு
2:14 PM, 8 Feb

15.57 சதவீத வாக்குகள் பதிவு

15.57 சதவீத வாக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1:52 PM, 8 Feb

கணவர், மகனுடன் பிரியங்கா வாக்களிப்பு

கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரைஹன் ராஜீவ் வதேரா ஆகியோருடன் பிரியங்கா காந்தி, டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தார். ராஜீவ் வதேரா முதல்முறையாக வாக்களித்தார்.
12:01 PM, 8 Feb

டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, மகள் பிரதீபா அத்வானியுடன் வாக்களித்தார்
11:53 AM, 8 Feb

டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டரை அறைய முயன்றார் காங். வேட்பாளர் அல்கா லம்பா
11:03 AM, 8 Feb

ஜாமியா நகர் வாக்குச் சாவடியில் நீண்டவரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்
11:02 AM, 8 Feb

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாக்களித்தனர்
11:01 AM, 8 Feb

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாக்களித்தனர்
10:57 AM, 8 Feb

அவுரங்கசீப் சாலை வாக்குச் சாவடியில் வாக்களிக்க வருகை தந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
10:25 AM, 8 Feb

வடகிழக்கு டெல்லி பாப்ராபூர் வாக்குச் சாவடியில் பணியில் இருந்த தேர்தல் அலுவலர் மரணம்
10:09 AM, 8 Feb

டெல்லியில் காலை 10 மணிவரை 4.33% வாக்குகள் பதிவு
READ MORE

Polling for Delhi assembly elections 2020 begins at 7 AM
English summary
Polling for Delhi assembly elections 2020 begins at 7 AM, you can join here for live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X