ரூ.436 கட்டினால் ரூ.5 லட்சம்? பிரதமரின் காப்பீடு திட்டத்தில் மாற்றம்?பிரதான் மந்திரி இன்சூரன்ஸ் மாஸ்
டெல்லி: பிரதமரின் காப்பீடு திட்டங்களில் இழப்பீடு தொகையை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.. இது தொடர்பான சில தகவல்கள் வெளியாகி, பொதுமக்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருப்பவருக்காக, மருத்துவ காப்பீட்டை தரக்கூடிய 2 திட்டங்கள்தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமாகும்.

மருத்துவ காப்பீடு: இவைகளில் வருடத்துக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. இதில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (PMJJBY) திட்டத்தை பொறுத்தவரை, வருடத்துக்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.. அதாவது மாத மாதம், ரூ.40க்கும் குறைவாக ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.. அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு போன்றவை தேவைப்படும்.
மத்திய அரசு: அரசின் இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும்.
இந்த திட்டத்தில் இணைய, 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்... வருடத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால், பாலிசியை வருடந்தோறும் புதுப்பித்து கொள்ள வேண்டும்.. ஒருவருக்கு ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். எனவே, வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
இன்சூரன்ஸ்: பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் அதாவது, Accidental Death காப்பீட்டின்படி, ஒருவர் விபத்தினால் இறந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.. விபத்து ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்தால், 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.. விபத்தில் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்திருந்தால் 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டு ஒருவர் இறந்தாலும் காப்பீடு கிடைக்கும். ஆனால், தற்கொலை செய்யப்பட்டு இறந்தால், அல்லது ஊனமுற்றோருக்கு எந்தவித காப்பீடும் இல்லை..
வருட சந்தா: இதன் வருட சந்தா வெறும் ரூ.436 மட்டுமேயாகும்.. இதற்கு வருடச் சந்தா ரூ.20 ஆகும். இதில், முதிர்வு தொகையாக எதுவுமே கிடைக்காது. வங்கி அல்லது தபால் துறையில் கணக்கு வைத்திருக்கும், 18 முதல் 70 வயது உடையவர்கள் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாதிட்டத்தில் இணையலாம்.
மேற்கூறிய பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமாயோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டங்களில், தற்போது இழப்பீட்டு தொகையை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம். வருடத்துக்கு 20 ரூபாய், 436 ரூபாய் கட்டணத்தில் அளிக்கப்பட்டு வரும் இரண்டு காப்பீடு திட்டங்களில் இழப்பீட்டு தொகையை, ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விரைவில் முடிவு?: இந்த 2 காப்பீடு திட்டங்களில் பிரீமியத்தை உயர்த்தாமல் இழப்பீட்டு தொகையை மட்டுமே அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலிக்கிறதாம். விரைவில் நிறைய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், காப்பீடு திட்டங்களில் இழப்பீட்டை அதிகரிக்க, மத்திய அரசு இப்படியொரு முன்னெடுப்பை நடத்துவதாக சொல்கிறார்கள். இதனால், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications