முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சம் டூ ரூ.25 லட்சம்: நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி முத்ரா கடன் திட்ட வரம்பானது ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவது கடந்த 24-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் முன்னர் கடன்களைப் பெற்று வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்காக தருண் பிளஸ் என்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த மத்திய அரசின் அறிக்கை: 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி பிரதமரால் தொடங்கப்பட்ட பிரதமரின் முத்ரா திட்டம், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

2024-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-25-ல் முத்ரா கடன் வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த புதிய வரம்பு கடந்த அக்டோபர் 24 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த அறிவிப்பு தருண் பிளஸ் என்ற புதிய கடன் வகையையும் அறிமுகப்படுத்துகிறது. இது தருண் வகையின் கீழ் முன்னர் கடன்களைப் பெற்று வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற அனுமதிக்கிறது.

முத்ரா கடன் திட்ட விவரங்கள்:
சிஷு: ரூ.50,000/- வரையிலான கடன்களை உள்ளடக்கியது
கிஷோர்: ரூ.50,000/- க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன்களை உள்ளடக்கியது
தருண்: ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை உள்ளடக்கியது
தருண் பிளஸ்: ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன்களை உள்ளடக்கியது

முத்ரா திட்டத்தின் சாதனைகள்
பெண்களுக்கு கடன்கள்: கடந்த நிதியாண்டில் சிஷு பிரிவின் கீழ் மொத்தம் ரூ.1,08,472.51 கோடி, கிஷோர் பிரிவின் கீழ் ரூ.1,00,370.49 கோடி, தருண் பிரிவின் கீழ் ரூ.13,454.27 கோடி வழங்கப்பட்டது.
முத்ரா செயலி
முத்ரா மித்ரா என்பது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் மொபைல் போன் செயலியாகும். கடன் கோருபவர் ஒரு வங்கியாளரை அணுக இது வழிகாட்டும். இந்த செயலியில் மாதிரி கடன் விண்ணப்ப படிவங்கள் உட்பட பயனுள்ள கடன் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

பிரதமரின் முத்ரா திட்டம், இந்தியாவில் தொழில்முனைவோரது அடிப்படைச் சூழலை மாற்றியமைத்துள்ளது. இது அனைவருக்கும் நிதி சேவை என்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கடன் வரம்பு ரூ.20 லட்சமாக விரிவடைவதால், சிறு வணிகங்களை வளர்ப்பதிலும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைத் தூண்டுவதிலும் இத்திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications