டெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்
டெல்லி: ஆம் ஆத்மியின் கரங்களை வலுப்படுத்த டெல்லி சென்றுள்ள பிரகாஷ்ராஜ் - ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒருவாரம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் ஆம் ஆத்மீக்கு பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராயுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது "நானும் ஆம் ஆத்மீயில் ஒருவன்தான் என்று கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மாற்றத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சி போராடிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய கட்சிக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் நான் ஆதரவளிக்க விரும்புகிறேன்.
கல்வி சுகாதாரம் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆம் ஆத்மி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இன்றைய நிலையில் நமது நாட்டுக்கு இதுதான் வேண்டும். நம் நாட்டில் பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்டவர்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். வெவேறு சிந்தனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் நாம் நாட்டை நேசிப்பதில் ஒன்று பட்டு இருக்கின்றோம்.
நமது நாட்டின் குடியரசை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டும். தற்போது ஆட்சி செய்வோரின் மதவாத, வெறுப்புணர்ச்சி அரசியலால் குடியரசை இழக்கக்கூடிய அபாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது இப்படி அழிவின் விளிம்பில் இருக்கும் குடியரசை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் திலிப் பாண்டேவுக்கு நேற்று ஆதரவு திரட்டிய பிரகாஷ்ராஜ் புதுடெல்லியில் பிரிஜேஷ் கோயலையும், கிழக்கு டெல்லியில் ஆதிஷியை ஆதரித்தும் பிரச்சாரம் நடத்தவுள்ளார், அதோடு அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்லியில் தங்கி பிரச்சாரம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications