முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனை பிரணாப் முகர்ஜியே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார். அத்துடன் ஒருவார காலத்தில் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து இன்று பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வெண்டிலேட்டர் சுவாசம் பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications