பிடிஐ உறவு முறிவு- தூர்தர்ஷன், வானொலிக்கு RSS இந்துஸ்தான் சமாச்சாருடன் ஒப்பந்தம்- புது சர்ச்சை!
தூர்தர்ஷன், வானொலிக்கான செய்திகளுக்கு RSS-ன் இந்துஸ்தான் சமாச்சாருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய அரசு நிறுவனங்களான தூர்தர்ஷன், வானொலிகளின் செய்திகளுக்காக பிடிஐ, யுஎன்ஐ நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்துத்துவா ஆதரவு செய்திகளை வழங்கக் கூடிய இந்துஸ்தான் சமச்சாருடன் புதியதாக மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

பொதுவாக ஊடக நிறுவனங்களுக்கு நிகழ்வுகளை வழங்கக் கூடிய செய்தி நிறுவனங்கள் பிடிஐ, யுஎன்ஐ. அனைத்து ஊடக நிறுவனங்களும் பிடிஐ, யுஎன்ஐ அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்றுடன் செய்திகளுக்காக ஒப்பந்தங்கள் செய்வது வழக்கம். இதேபோலதான் பிரசார் பாரதியின் கீழான தூரதர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியும் செய்திகளுக்காக பிடிஐ, யுஎன்ஐ ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
தற்போது பிடிஐ, யுஎன்ஐ ஆகியவற்றுடனான தூர்தர்ஷன், வானொலிக்கான செய்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்துஸ்தான் சமாச்சார் என்ற நிறுவனத்திடம் செய்திகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்துஸ்தான் சமாச்சார் என்பது இந்துத்துவா ஆதரவு செய்திகளை தரக் கூடிய நிறுவனம் என்பதால் இது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இந்துஸ்தான் சமாச்சார் நிறுவனத்தை உருவாக்கியவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஷிவ்ராம் சங்கர் ஆப்தே. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் இவர். இப்படியானவரின் நிறுவனத்திடம் இருந்து தூர்தர்ஷன், வானொலி செய்திகளை வாங்குவதை ஏற்க முடியாது என்றார்.
சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், பிரசார் பாரதி - பிடிஐ நிறுவன ஒப்பந்தம் ரத்து; தூர்தர்ஷனும் அகில இந்திய வானொலியும் இனி ஆர்.எஸ்.எஸ். தரும் செய்திகளைத்தான் வெளியிடும். கோல்வால்கரும் விஎச்பியின் ஆப்தேயும் உருவாக்கியது இந்துஸ்தான் சமாச்சார் அமைப்பு. சில விதிவிலக்குகளைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் 2024-ம் ஆண்டு தேர்தலை நோக்கி நகரும் போது வெறுப்பு பிரசாரத்தையும் தீயென பரவும் பொய்ச் செய்திகளையும் மூர்கத்தனமாகவே முன்னெடுக்கப் போகின்றன என கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவின் தூதரை பேட்டி எடுத்த சர்ச்சையில் பிரசார் பாரதி, பிடிஐ இடையே பெரும் மோதல் வெடித்தது. பிடிஐ செய்தி நிறுவனத்தை ஆன்ட்டி-நேசனல் என பிரசார் பாரதி முத்திரை குத்தி விமர்சித்தது பெரும் சர்ச்சையானது.
பிடிஐ என்பது என்ன?

இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கும் நிறுவனம் பி.டி.ஐ. எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. இது 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1949 முதல் செயல்பட்டு வருகிறது. 100 பத்திரிகை நிறுவனங்கள் இணைந்து இந்த செய்தி நிறுவனத்தை நடத்துகிறது. பிடிஐயின் போர்டில் மொத்தம் 16 பேர் உறுப்பினர்கள். 4 பேர் ஊடகம் சாராத வெளியில் இருந்து இடம் பெற்ற இயக்குநர்கள். அனைத்து ஊடகங்களும் ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையை பிடிஐக்கு வழங்குகின்றன. மத்திய அரசின் பிரசார் பாரதியும் பெருமளவு பிடிஐ-ன் செய்திகளை வழங்குவதால் கணிசமான சந்தா தொகை செலுத்துகிறது.
இந்துஸ்தான் சமாச்சார்

இந்துத்துவா கோட்பாட்டின் செயல்பட்ட இந்துஸ்தான் சமாச்சார் செய்தி நிறுவனம், நிதி நெருக்கடியால் 1986-ல் மூடப்பட்டது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக வகித்த போது 2002-ம் ஆண்டு மீண்டும் இந்துஸ்தான் சமாச்சார் நிறுவனம் செயல்பட தொடங்கியது. 2017-ம் ஆண்டு முதல் பிரசார் பாரதிக்கு இந்துஸ்தான் சமாச்சார், இலவசமாக செய்திகளை வழங்கி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications