காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்! நடந்தது என்ன? பிகே தந்த பரபர விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிகே இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்டி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

கட்சிக்கு உள்ளேயும் இந்த கோரிக்கை அதிகரித்த நிலையில், விரைவில் இது தொடர்பாக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

இந்த ஒரு சூழலில் தான், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதற்காக சில நாட்கள் இடைவெளியில் அவர் காங்கிரஸ் தலைமையை இரு முறை சந்தித்து இருந்தார். 2024ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாகவும் அதற்கான திட்டத்தையும் பிகே காங்கிரஸ் தலைமையிடம் முன்மொழிந்து இருந்தார்.

சிறப்பு குழு

சிறப்பு குழு

இது தொடர்பாக ஆய்வு செய்த சிறப்புக் குழு இறுதி அறிக்கையை சோனியா காந்தியிடம் நேற்று சமர்ப்பித்து இருந்தது. இந்த விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் நேற்றைய தினமே முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதற்குப் பதிலாக 2024 தேர்தல்களுக்கு முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒரு அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவை உருவாக்குவதாகக் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

சுர்ஜேவாலா

சுர்ஜேவாலா

அந்த குழுவில் பிகே இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரசாந்த கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாகக் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பிரசாந்த் கிஷோர் உடனான பிபிடி விளக்கம் மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து. காங்கிரஸ் தலைவர் 2024ஆம் ஆண்டுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை உருவாக்கினார்.

மறுப்பு

மறுப்பு

அதில் பிரசாந்த் கிஷோர் இணைய வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார். இருப்பினும், அதை அவர் மறுத்துவிட்டார். அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கிய ஆலோசனைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிகே இணைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிகே தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

வரும் 2024 பொதுத்தேர்தலுக்கு புதிய நபர் ஒருவரைப் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்ற பிகேவின் திட்டத்தை 8 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒப்புக்கொண்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பிகே காங்கிரஸ் கட்சியில் இணைவதில் பிரச்சினை இல்லை என்றாலும் கூட அவர், இனி பிற கட்சிகள் உடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்ற நிபந்தனையைக் காங்கிரஸ் சிறப்புக் குழு முன் வைத்துள்ளது. இந்தச் சூழலில் தான் அவரது ஐபேக் நிறுவனம் சமீபத்தில் தெலங்கானாவின் டிஆர்எஸ் கட்சி உடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

பிளவுபட்ட கருத்து

பிளவுபட்ட கருத்து

இதனால் காங்கிரஸ் கட்சியில் சில மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தான், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாகக் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். சிறப்பு குழுவில் பிகே காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றி பிளவுபட்ட கருத்தே நிலவுகிறது. பிரியங்கா காந்தி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். அதேநேரம் திக்விஜய சிங், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ் அவருக்கு எதிராக உள்ளனர்.

பிகே விளக்கம்

பிகே விளக்கம்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையாது ஏன் என்று பிகே விளக்கி உள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் இணைந்து தேர்தல் பொறுப்புகளை எடுத்துக்கொள்வதற்காக காங்கிரஸ் எனக்கு கொடுத்த ஆபரை நான் மறுத்துவிட்டேன். என்னுடைய

காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைவர் ஒருவர்தான் தேவை. அதேபோல் கட்சியின் அடிப்படை அமைப்பில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் தீவிர ஆற்றல் தேவை. நான் தேவை இல்லை. இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து என்று விளக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+