ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நிதிச்சுமையை குறைக்கும்.. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆதரவு
டெல்லி: குடியரசு தினம் கொண்டாட்டப்படவுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திரெளபதி முர்மு, இந்த திட்டம் நிர்வாகத்தன்மையை ஊக்குவிக்கும் என்றும், நிதிச்சுமையை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை டெல்லியில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். இதன்பின்னர் இந்தியாவின் கலாச்சாரமும், பண்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு வல்லமை தொடர்பான அணிவகுப்பு நடக்கவுள்ளது.

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு திரெளபதி முர்மு உரையாற்றியுள்ளார். அதில், கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு நமது முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். காலனித்துவ மனநிலையை மாற்ற நாம் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். புதிய குற்றவியல் சட்டங்கள் தான் காலனித்துவ மனநிலையில் இருந்து வெளியே வந்ததற்கு ஆதாரம்.
கல்வித்துறையில் தொடர்ந்து நடக்கும் முதலீடுகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வியின் தரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் நிர்வாக நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், நிதிச்சுமையை குறைக்கும். இந்த திட்டத்தால் அரசின் கொள்கை முடிவுகள் முடக்கப்படாமல் இருக்கும். அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க புதிய சட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பசி, பட்டினி, வறுமை நிலவியது. ஆனால் நாம் நம் மீது நம்பிக்கை வைத்து வளர்ச்சி பெறுவதற்கான சூழல்களை உருவாக்கினோம். சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதாரம் முக்கியமான பங்காற்றி வருகிறது. இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் தான் காரணம். அண்மை காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. இதன் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் வருமானம் உயர்ந்து அவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications