78வது சுதந்திர தினம்! ஜனாதிபதி திரௌபதி முர்மு சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
டெல்லி: நாளை நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான புதன்கிழமை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா். அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 7 மணிக்கு அவரது உரை ஒலி-ஒளிபரப்பப்பட உள்ளது. முதலில் இந்தியிலும், பின்னா் ஆங்கில மொழிபெயா்ப்பும் ஒளிபரப்பாகும்.

பிராந்திய தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 9.30 மணியளவில் பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திர தினமான நாளை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறாா். 'வளா்ந்த பாரதம்' என்ற கருப்பொருளில் நிகழாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications