போப் ஆண்டவர் மறைவு.. ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி.. நாடு முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிப்பு
டெல்லி: போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் ஆண்டவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. போப் பிரான்சிஸ் உடல் அடக்க நிகழ்வு நடைபெறும் நாளான இன்று இந்தியா முழுவதும் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி மாதம், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாசக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ், உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 7.35 மணிக்கு காலமானதாக வாட்டிகன் தெரிவித்தது. போப் பிரான்சிஸின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்களின் பார்வைக்காக, அங்குள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் வைக்கப்பட்டது. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வாட்டிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத்தனர். போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்றார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வாட்டிகன் சிட்டி சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் நேரில் சென்று போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் 50 நாடுகளின் தலைவர்கள் உட்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3 நாட்களில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது என வாட்டிகன் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் ஆண்டவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
போப் ஆண்டவர் மறைவையடுத்து இந்திய அரசு மூன்று நாள் துக்கத்தை அறிவித்தது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏப்ரல் 22, ஏப்ரல் 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கின்போது ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
போப் ஆண்டவர் இறுதிச் சடங்குகளையொட்டி, நாடு முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. மேலும், இன்று எவ்வித அரசு நிகழ்ச்சி கொண்டாட்டங்களும் இருக்காது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 26) இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என அறிவித்துள்ளதால் தமிழகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இன்று அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படாது என்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications