ஹைலைட் + புதுமை.. இந்திய கடற்படை கப்பல்களை ஜனாதிபதி இன்று பார்வையிடுகிறார்.. விசாகப்பட்டினத்தில்..!
இந்திய கடற்படையின் கப்பல்களை ராம்நாத் கோவிந்த் இன்று ஆய்வு செய்கிறார்
டெல்லி: இந்திய கடற்படையின் கப்பல்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.. விசாகப்பட்டினம் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை கடலோர காவல்படை கண்காணிப்பு கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவில் சென்று ஜனாதிபதி இந்த ஆய்வை மேற்கொள்கிறார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பை வகிப்பவர் குடியரசு தலைவர்.. பொதுவாக, ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிக்காலத்தில் ஒருமுறையாவது கடற்படை ஆய்வு நிகழ்வை நடத்த வேண்டும்.
அந்த வகையில்தான், இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை கப்பல்களை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

ஆளுநர் - முதல்வர்
இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஜனாதிபதியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கவர்னர் ஹரிசரண், கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்... விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், விசாகப்பட்டினமே தற்போது கோலாகலம் பூண்டுள்ளது.

சாகசங்கள்
இந்த அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பங்கேற்கின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 போர் விமானங்கள் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்துகின்றன. இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், இந்த நிகழ்வானது நடத்தப்படுகிறது. இந்திய கடற்படையின் 75 வருடங்கள் பங்கு என்ற கருத்தை மையமாக கொண்டு நடைபெற உள்ளது..

ஹைலைட்
அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த அணிவகுப்பில் இன்னொரு ஸ்பெஷல் ஹைலைட் உள்ளது.. இந்த அணிவகுப்பில் பங்கேற்கும் 60 கப்பல்களில், 47 கப்பல்கள், இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
Recommended Video

ட்ரோன் கேமிராக்கள்
அதேபோல, எப்போதும் இல்லாமல் இந்த வருடம் நடக்கும் இந்த நிகழ்வில், தூர்தர்ஷன் பல்வேறு புதுமைகளுடன் இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, 30 ட்ரோன் கேமராக்கள், தரையிலும், கடலிலும் அமைக்கப்பட்ட பல்முனை கேமராக்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.. அதிலும், நிலத்திலும், கடலிலும் காட்சிகளை துல்லியமாக காட்டும் உயர்தொழில்நுட்ப லென்சுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications