Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கற்க கசடற கற்பவை".. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில்.. ஓங்கி ஒலித்த திருக்குறள்..!

திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் ராம்நாத் கோவிந்த்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, கல்வி தொடர்பான உரையில் குடியரசு தலைவர் பேசினார்.

Recommended Video

    திருக்குறளும், புதிய கல்விக் கொள்கையும்: பார்லிமென்டில் ஜனாதிபதி உரை!

    2022-2023 நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியுள்ளது.. இந்த கூட்டத் தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 1ம் தேதியான நாளைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்..

     முக்கிய கவனம்

    முக்கிய கவனம்

    ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவரின் உரை முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.. குடியரசு தலைவர் பேசும்போது, "இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.. நேதாஜி 125-வது ஆண்டு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறது அரசு.. கொரோனா 3-வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது.. அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டி வருகிறது.. கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது...

    தடுப்பூசி

    தடுப்பூசி

    மூத்த குடிமக்களில்.. இந்திய தயாரிப்பு தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன்பெற்று வருகிறது.. இந்தியா முழுவதும் உள்ள சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன... இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனம் மூலம் 180 நாடுகள் பயன்பெற்று வருகின்றன... கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகள் பயன்படுகின்றன என்பன உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.. இதில், கல்வி தொடர்பாக பேசியபோது திருக்குறளை மேற்கோள்காட்டினார் குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த்.. "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்..

     உழவுத்தொழில்

    உழவுத்தொழில்

    இப்படித்தான் கடந்த ஆண்டு, முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அப்போது "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி தனது உரையை தொடர்ந்தார்.. அந்த திருக்குறளின் அர்த்தம் "உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே" என்பதாகும். இதன் மூலம் உழவுத்தொழிலின் மேன்மையை குடியரசுத் தலைவர் அப்போது குறிப்பிட்டார்.

    வேதனை

    வேதனை

    அதுமட்டுமல்ல, எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக வேதனை தெரிவித்திருந்த அவர், வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும் என்றும் எச்சரித்திருந்தார்.. இந்த முறை கல்விக்கான உரையில், கற்க கசடற திருக்குறளை மேற்கொள் காட்டி உள்ளார்.. பிழை இல்லாதவற்றை தனது குறைகள் நீங்குமளவுக்கு கற்று கொள்ள வேண்டும்.. கற்றபிறகு அதன்படி நடக்க வேண்டும் என்பதே அர்த்தம்..மொழி திணிப்பு விவகாரங்கள் தலைதூக்கி வரும் சமீபகால சூழலிலும், திருக்குறளின் முக்கியத்துவம் இருந்து கொண்டே இருக்கிறது.. அந்த வகையில், நாடாளுமன்றத்தில் இன்றும் அதிர ஒலித்துள்ளது "திருக்குறள்"

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+