டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டின் துடிப்பான ஜனநாயக சக்திக்கு தலை வணங்குகிறேன்! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

Google Oneindia Tamil News

டெல்லி: இன்றுடன் ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Recommended Video

    21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக்குவதற்கு நாடு தயாராகி வருகிறது- ராம்நாத் கோவிந்த்

    இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

    நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்தி இருந்தார்.

    திரௌபதி முர்மு நாளைய தினம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்க உள்ளார். இந்தச் சூழலில் இன்றுடன் ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    இந்தியாவின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு வணக்கம் செலுத்துவதாகும் அனைவரும் வேர்களுடன் இணைந்திருப்பதே இந்திய கலாசாரத்தின் சிறப்பு என்றும் கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், "சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு நாட்டிற்குச் சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பு.

     President Ramnath Kovind says I salute the power of country’s vibrant democracy

    இளைஞர்கள் தங்கள் சொந்த கிராமங்கள், படித்த பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு சிறப்பானது. நாட்டின் அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

    காந்தியின் பாணியில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கட்சிகள் மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைய வேண்டும்.

    பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கப் போராட்டம் உள்ளிட்ட பல வழிகளை அரசியலமைப்பு நமக்கு வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தேசத்தின் தந்தை அந்த நோக்கத்திற்காகச் சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.

    ஆனால் காந்தி இதன் மறுபக்கம் குறித்தும் கவலைப்பட்டார். குடிமக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உரிமை உள்ளது, ஆனால் அது எப்போதும் அமைதியான காந்திய வடிவில் இருக்க வேண்டும்" என்றார்.

    நன்றி சொல்ல வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. கேமராவையே உற்று நோக்கினாரா பிரதமர் மோடி? உண்மை என்ன?நன்றி சொல்ல வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. கேமராவையே உற்று நோக்கினாரா பிரதமர் மோடி? உண்மை என்ன?

    English summary
    President Ramnath Kovind says I salute the power of country’s vibrant democracy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X