ஜனாதிபதி தேர்தல்:துரோகம் செய்த கறுப்பு ஆடுகள்- 120 எம்எல்ஏக்கள்,17 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் 120 எம்.எல்.ஏக்கள், 17 எம்.பி.க்கள் கட்சி மாறி திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 22 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வரும் 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.

திரெளபதி வெற்றி
ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரெளபதி முர்மு 6,76,803 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80, 177 வாக்குகள் கிடைத்தன. 64%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற திரெளபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.

முதல் பழங்குடி பெண்
இந்தியாவில் ஜனாதிபதியாகும் 2-வது பெண் திரெளபதி முர்மு. அவருக்கு முன்னதாக பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்தார். இந்தியாவில் ஜனாதிபதியாகும் முதல் பழங்குடி இனத்தவர் திரெளபதி முர்மு. அவரது வெற்றியை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கட்சி மாறி வாக்களிப்பு
திரெளபதி முர்முவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் 17 பேர் வாக்களித்துள்ளனர்; அதேபோல் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 120 எம்.எல்.ஏக்களும் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரையில் அஸ்ஸாமில்தான் மிக அதிகமான எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
Recommended Video

எந்த மாநிலங்கள்?
மாநிலங்கள் வாரியாக கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏக்கள் விவரம்: அஸ்ஸாம்- 22; மத்திய பிரதேசம்- 19; மகாராஷ்டிரா 16; உ.பி- 12; குஜராத் 10; ஜார்க்கண்ட் 10; பீகார்- 6; சத்தீஸ்கர்- 6; ராஜஸ்தான் 5; கோவா- 4. இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 126 பேர் கொண்ட சட்டசபையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 79 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் 104 எம்.எல்.ஏக்கள், திரெளபதி முர்முவுக்கு வாக்களித்தனர். 2 பேர்தான் வாக்களிக்கவில்லை என விளக்கம் அளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications